இவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் – வெளிநாட்டில் டிடியை கவர்ந்த அந்த நபர் யார் பாருங்க.

0
410
DD
- Advertisement -

விஜய்டிவி டிடியின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரட் தொகுப்பாளினியாக டிடி திகழ்ந்து வருகிறார். டிடியின் முழுப்பெயர் திவ்யதர்ஷினி. இவர் தன்னுடைய பேச்சு திறனாலும், சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். மேலும், இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அதோடு டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் வாங்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. ஆனால், முக்கிய பிரபலங்கள், முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் கூட இவர் நயன்தாராவை வைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்ற தொகுத்து வழங்கியிருந்தார். இப்படி ஒரு நிலையில் டிடி உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். இந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் டிடி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இதையும் பாருங்க : கமலுக்கு பதில் யார் Host – இவங்க ரெண்டு பேர் பேரு தான் அடிபடுது. யார் வந்தா நல்லா இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் அவர் பாரிசில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா சாப்பிட்டு இருக்கிறார். அப்போது அவர் அந்த பீட்சா குறித்தும் அதை சமைத்தவர் குறித்தும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மேலும், டிடி அவரை சந்தித்தது மட்டுமின்றி அவரை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் பதிவிட்டுகிறார். உடனே இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் உண்மையாலுமே, நீங்கள் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறீர்களா? இல்லையா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆனால், டிடி இதனை மிகவும் விளையாட்டாகவே தான் குறிப்பிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து இருந்தார். மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு முடிந்தது. இவர்களின் விவாகரத்துக்கு குறித்து பலரும் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement