இவரை பார்த்தவுடன் பொது மேடையிலேயே கண் கலங்கிய கோபிநாத் ! நெகிழ்ச்சி சம்பவம்

0
828
anchor gopinath

விஜய் டிவியில் இருக்கும் ஒரு சில தொகுப்பாளர் களில் ஒருவர் தான் கோபிநாத்.இவர் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா என்ற நிகழ்ச்சி மூலம் இவருக்கு நீயா நானா கோபி என்ற பெயரும் வந்தது.

neeya-naana-gopinath

விஜய் டிவி யில் ஒரு சில மோசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும்.நீயா நானா நிகழ்ச்சி ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சி என்று ஓரளவுக்கு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். அதிலும் நீயா நானா கோபிநாத் விஜய் டிவி யின் ஒரு மூத்த தொகுப்பாளர் என்று கூட கூறலாம் அதனால் விஜய் டிவி யில் நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிக்கும் இவரை காணாமல் இருக்க முடியாது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு கோபிநாத் ஓரு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.அப்போது அவருக்கு ஒரு விருது வழங்கி கவுரவப்படுத்தினர்.அவருக்கு திடீர் என்று ஒரு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளனர் அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள்.அது என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் கோபி பேசிக்கொண்டிருக்கு போது அவரது தந்தையை மேடைக்கு அழைத்து வந்துள்ளனர்.அப்போது அவரது தந்தையை திடீர் என்று மேடையில் பார்த்ததும் கண்கலங்கி அழத்தொடங்கிவிட்டார் கோபி.இந்த சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.