முதலில் என்ன பாத்து சிரிச்சாங்க. ஆனால், வடிவேலு மாதிரி ஒன்னு பண்ணேன்- நடிகர் இர்பான் சொன்ன சீக்ரட்.

0
2145
irfan
- Advertisement -

90ஸ் குழந்தைகளின் பேவரைட் சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இர்பான். இதனை தொடர்ந்து இர்பான் ‘சரவணன் மீனாட்சி ‘ தொடரில் சரவணனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிறகு இர்பான் அவர்கள் சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற சில படங்களில் நடித்து வந்தார். இதில் எந்த படமும் அவருக்கு பெரியதாக அமையவில்லை. ஆனாலும், சுண்ணாட்டம் படம் தான் அவருக்கு ஓரளவிற்கு சொல்லும் படியாக அமைந்தது.

-விளம்பரம்-
Image result for irfan in rajavukku check"

- Advertisement -

தற்போது சினிமாவில் பிரபலமான இயக்குனரும், நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளிவந்த படம் “ராஜாவுக்கு செக்”. சேரன் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு இயக்கி நடித்து உள்ள படம் ராஜாவுக்குச் செக். இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். இந்த படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் இர்பானின் நடிப்பு பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது.

இதையும் பாருங்க : சன் குழுமத்திற்கு போட்டியாக விஜய் குழுமம் ஆரம்பிக்கப்போகும் இரண்டு புதிய சேனல்.

இந்த படத்தின் அனுபவம் குறித்து இர்பானிடம் கேட்டபோது அவர் கூறியது, சினிமா பேக்ரவுண்ட் இல்லாத குடும்பத்தில் இருந்து தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக மெர்குரி பூக்கள் படம் மூலம் தான் திரையில் என்னுடைய முகம் வந்தது. நான் முதலில் இயக்குனராக வேண்டும் தான் நான் ஆசைப்பட்டேன். இதற்காக பெங்களூரில் டைரக்ஷன் கோர்ஸ் படித்து முடித்தேன். மேலும், ஷார்ட் பிலிம் கூட நான் எடுத்திருந்தேன். ஆனால், என் எண்ணத்தை மாற்றியது கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி சீரியல்கள் தான்.

-விளம்பரம்-
Image result for irfan in rajavukku check"

இந்த சீரியல்கள் மூலம் எனக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் வந்தது. அதனால் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். நான் இதுவரை நடித்த படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது சேரன் சார் இயக்கத்தில் ராஜாவுக்குச் செக் என்ற படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து பலரும் என்னை பாராட்டினார்கள். நான் எடுத்த முடிவு தப்பா போகவில்லை என்று எனக்கு ஒரு சின்ன திருப்தி இருக்கு. ஆனால், சினிமாவில் தான் என்னுடைய நடிப்பு குறித்து யாரும் சொல்லவில்லை. அது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கு.

இதையும் பாருங்க : அஜித், ஷாலினியை திருமணம் செய்து கொண்டதும் வருத்தப்பட்ட பிரபல நடிகர். சுஹாசினி சொன்ன சீக்ரெட்.

முதல் நாள் ஷூட்டிங்கில் இயக்குனர் சொன்ன லுக்கில் நான் போய் இருந்தேன். ஆனால், என்னைப் பார்த்து அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த படத்தில் நீ வில்லன் கதாபாத்திரம். சேரன் தான் ஹீரோ என்று சொன்னார். செட்டில் இருந்த எல்லாரும் சிரிச்சாங்க கஷ்டமாக இருந்தது. பிரண்ட்ஸ் படத்தில் எல்லோரும் சிரித்தபோது வடிவேல் சாரும் சேர்ந்து சிரிப்பார். அந்த மாதிரி தான் நானும் சிரித்தேன். நான் சேரன் சாருடன் நடித்தபோது நிறைய சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் நடந்தது. நான் சேரன் சார் இடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று கூறினார்.

Advertisement