ஐயோ, அது கடிச்சா செத்துருவாங்களே – விஷ மீன் கடித்துவிட்டதாக புலம்பிய ஜாக்லினை கேலி செய்யும் ரசிகர்கள்.

0
544

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

இதையும் பாருங்க : நீண்ட வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுரேஷ். அதுவும் இந்த மாஸ்டர் பட நடிகர் படத்தில்.

- Advertisement -

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். இது ஒருபுறம் இருக்க மற்ற பிரபலங்களை போலவே ஜாஸ்மினும் தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை சமீபத்தில் தொடங்கியிருந்தார்.

துவங்கிய ஒரு சில வாரங்களிலேயே இவரது பக்கத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஜாக்லின் கோவா சென்ற போது கடலில் பாரா கிளடிங் செய்திருக்கிறார். அப்போது தன்னை ஒரு ஜெல்லி பிஷ் கடித்து விட்டதாகவும் இதனால் கால் வீங்கி விட்டதாகவும் இனிமேல் நான் அங்கே செல்லவே மாட்டேன் என்றும் புலம்பியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜெல்லி பிஷ் கடித்தால் செத்து விடுவார்கள் என்றும் ஜெல்லி பிஷ்க்கு ஒன்னும் ஆகலையே என்றும் கேலி செய்து வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement