கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், திடீரென்று இந்த உலகம் மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் மாறிவிட்டது தினமும் சந்தோஷத்துடனும் ஆச்சரியத்துடனும் தொடர்கிறது. எல்லாம் உன்னால் தான் என்னுடன் இருப்பதற்கு மிக்க நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார் ஜாக்லின். மேலும், இந்த பதிவில் கமன்ட் பகுதியை முடக்கி இருந்தார் ஜாக்லின்.
அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே நபருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலர் இது யாரு உங்க காதலரா, இது ஆணா இல்லை பெண்ணா என்று பல விதமான கமெண்டுகளை செய்து இருந்தனர். இதனால் கடுப்பான ஜாக்லின், அது என் நெருங்கிய தோழி தான். அவள் எப்படி முடி வெட்டினால் உங்களுக்கு என்ன. அது என்ன பையனா, அது பொண்ணு மாதிரியே இல்ல என்றெல்லாம் கமன்ட் பண்றாங்க.
அதே போல ஒரு பொண்ணு அப்படி முடி வெட்டினா உங்களுக்கு என்ன அது அவள் விருப்பம். அவள் சம்பதிக்கறாலோ இல்லை அவங்க வீட்ல காஸ் கொடுக்கராங்களோ. அந்த காஸ்ல அவ முடி வெடிக்கிறா. அதே போல பல பேர் அசிங்கமா கமன்ட் பண்றீங்க, உங்களுக்காக நான் கமன்ட் பகுதியை ஆப் பண்ண போறது இல்ல என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஜாக்லின் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.
Vijay Tv #Jackine Replied To Abusive Comment pic.twitter.com/x9PzIPeveF
— chettyrajubhai (@chettyrajubhai) March 2, 2023
அப்போது தனது தோழியுடன் எடுத்த புகைப்படத்தில் பெண் ஒருவர் ‘ச்சீ, லெஸ்பியனாடி த்தூ’ என்று கமன்ட் செய்து இருந்தது குறித்து கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய ஜாக்லின் ‘ஒரு மூன்று பெண்கள் சேர்ந்து போட்டோ போட்டாலும் அப்படித்தான் பேசுவார்கள். தனியாக போட்டோ போட்டாலும் அப்படித்தான் பேசுவார்கள். நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நமக்கு முன்னால் மற்றவர்கள் சொல்லும் போது நீ அவ்வளவுதான் யோசிப்பியா, ஒருவரை தவறாக பேச வேண்டும் என்று உனக்கு ஏன் ஒரு உறுத்துது என்றெல்லாம் எனக்கு கேட்கத் தோன்றும்’ என்றும் கூறியுள்ளார்.