விஜய் டிவிக்கு வர்லனா, நான் இந்த வேலைக்கு தான் போய் இருப்பேன். மனம் திறந்த ஜாக்லின்.

0
682
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

இதையும் பாருங்க : உங்கள திருமணம் செய்ய என்ன பண்ணனும் – வேறு ஒருவரை காதலிக்கு பிரியா பவானியிடம் கேட்ட ரசிகர். அதற்கு அவரின் பதில்.

- Advertisement -

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.

Vijay TV Jacqueline Age Wiki Bio Latest Pics – MaplaBench

அதே போல சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், டெலிவிஷன்ல வரலைனா உங்களோட வேலை என்னவா இருந்திருக்கும் என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஜாக்லின், ஏர் ஹோஸ்டர்ஸ்ஸாக ஆகி இருப்பேன். ஏன் என்றால் நான் அதுக்கு தான் படிச்சேன். இல்லை என்றால் ஒரு குக்காக மாறி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement