உங்கள திருமணம் செய்ய என்ன பண்ணனும் – வேறு ஒருவரை காதலிக்கு பிரியா பவானியிடம் கேட்ட ரசிகர். அதற்கு அவரின் பதில்.

0
1033
priya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், உங்களை திருமணம் செய்துகொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர், புதிதாக வருபவர்களுக்கு நான் கொஞ்சம் சிக்கலான நபர். எனவே, அதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : கருணாநிதி அருகில், தனது தந்தை ஸ்டாலின் கையில் குழந்தையாக உதயநிதி.

- Advertisement -

கடந்த சில காலமாகவே பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டது.ராஜவேல் பிறந்தநாளின்போது பிரியா பவானி சங்கர் ஒரு நீண்ட கவிதையை எழுதி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். குறிப்பாக அந்தப் பதிவில் நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை.

This image has an empty alt attribute; its file name is 1-197-713x1024.jpg

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என்னுடைய உலகத்தில் என்றும் நீ ஒரு சூரிய ஒளியாக இருப்பாய் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கர் இதுகுறித்து தெரிவிக்கையில், என்னுடைய கல்லூரியில் ஆரம்பித்து இப்போது வரை நான் சொல்லுகிறேன் என்னிடம் அளவுக்கு மீறிய அன்பை ஒரு நபர் காண்பிக்கிறார் என்றால் அது அவர்தான் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

Advertisement