‘கனா காணும் காலங்கள்ல இதுனால தான் நடிக்கல’ – ஜோடி பிரியா லேட்டஸ்ட் பேட்டி. புள்ள குட்டின்னு எப்படி இருக்காங்க பாருங்க இப்போ.

0
340
priya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பிரியா மஞ்சுநாதான். இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி தொடரில் பிரியா நடித்து இருக்கிறார். பிறகு இவர் திடிரென்று சில ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் பெயர் சுந்தர். இவர் சென்னையில் பிரபல கார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மேலும், திருமணத்திற்கு பிறகும் பிரியா மீடியாவை விட்டு விலகி விட்டார்.

-விளம்பரம்-

இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். சமீபத்தில் இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவாக கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் ஜோடி பிரியா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஜோடி பிரியா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய கேரியரில் எதுவும் தீர்மானித்து நடந்தது கிடையாது.

- Advertisement -

ஜோடி பிரியா அளித்த பேட்டி:

சின்ன வயதில் இருந்தே டான்ஸ் ஆட பிடிக்கும். பல மேடை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி இருக்கிறேன். அப்படி ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு தான் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு கூப்பிட்டார்கள். அதுதான் என்னோட முதல் ரியாலிட்டி ஷோ. அங்கு தான் என் டான்ஸ் பயணம் ஆரம்பித்தது. எதார்த்தமாக அமைந்த பயணத்தை விரும்பி ஏற்றுக் கொண்டேன். பிறகு ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் நானும் சுனிதாவும் சேர்ந்து நடனம் ஆடினோம். அதே நிகழ்ச்சியில் வேற சீசனில் தனித்தனியாக பிரிந்து ஆடினோம். நானும் சுனிதாவும் இப்பவரை நல்ல பிரெண்ட்ஸ்.

மீடியா பயணம் குறித்து பிரியா சொன்னது:

ஆரம்பத்தில் நான் மேடை நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடும் போகும் போது எங்கள் வீட்டில் அந்தளவுக்கு சப்போர்ட் இல்லை. என் தங்கைகள் ரெண்டு பேருமே நல்ல படிப்பார்கள். நான் மட்டும்தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். மானாட மயிலாட போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகுதான் நான் உண்மையாகவே இந்த கேரியரில் கவனம் செலுத்துகிறேன் என்று என்னை புரிந்து கொண்டு சப்போர்ட் பண்ணினார்கள். அதேபோல் கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண் டேன். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் ,தாமு, சுரேஷ் ஆகிய 3 பேரும் தான் நிகழ்ச்சியின் நடுவர்கள்.

-விளம்பரம்-

சமையல் நிகழ்ச்சி குறித்து பிரியா கூறியது:

இப்ப குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிற மாதிரி அப்ப ஜட்ஜஸ் கிடையாது. ஆப் ஸ்கிரீனில் ஜாலியாக இருப்பார்கள். ஆனால், ஆன் ஸ்கிரீனில் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருப்பார்கள். மேலும், எனக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சிக்கு போகும்போது எனக்கு அவ்வளவாக சமைக்க தெரியாது. பிறகு நானே ஆர்வமாக ஒவ்வொரு டிஸ்ஸையும் கற்றுக்கொண்டு சமைக்க ஆரம்பித்தேன். ஒரு முறை நான் சமைத்தது நல்லா இல்லை என்று பட் சார், பேசி குக்கிங் முதலில் கற்றுக் கொள் என்று சொன்னார். அது ரொம்ப ஒரு மாதிரியாக இருந்தது.

சீரியலில் நடிக்காத காரணம்:

அது அடுத்த எபிசோடில் செம்மையாக சமைத்து செஃப் ஆப் தி வீக் வாங்கினேன். பின் அந்த ஷோவில் மூன்றாம் இடம் பிடித்தேன். சமையல்,டான்ஸ் எதுவானாலும் சரி நடுவர்கள் சொல்ற பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டு கமெண்ட்ஸ்ஸை மனதில் வைத்து செய்தால் வெற்றி நிச்சயம். திட்டுகள் தான் நம்ப வளர்ச்சிக்கு உதவும். அதே மாதிரி எனக்கு நடிப்பு சுத்தமாக செட்டாகாது. அதனால் கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடிக்க கேட்டப்ப எனக்கு ஆக்டிங் செட் ஆகாதுன்னு சொல்லி போகல . என்னுடைய கேரக்டர் ரொம்ப ஜாலியாக துறுதுறுவென்று இருப்பது தான். அதனால் நாள் முழுக்க கிளிசரின் போட்டு அழுக முடியாது. ஆனால்,சரவணன் மீனாட்சி சீரியலில் நிஜ கேரக்டர் மாதிரியான ரோல் என்பதால் தான் நான் ஓகே சொன்னேன்.

ரீ-என்ட்ரி குறித்து பிரியா கூறியது:

தற்போது மீடியாவிற்கு வர வேண்டும் என்று எந்த அவசியமும் ஏற்படவில்லை. அதற்கான நேரமும் இல்லை. குழந்தைகள் பார்த்துக் கொள்வதிலேயே நேரம் சரியாக இருக்கு. அதனால்தான் வந்த வாய்ப்புகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன். ஆனால், இப்போதைக்கு re-entry குறித்து எந்த ஐடியாவும் இல்லை. குழந்தைகள், கணவர் என்று ஜாலியாக என்னுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Advertisement