பிறந்தநாளன்று மனைவியின் புகைப்படத்தை பதிவிட்ட மா கா பா ஆனந்த். குவியும் வாழ்த்துக்கள்.

0
90970
ma-ka-pa
- Advertisement -

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மா.கா.பா ஆனந்த். மா.கா.பா ஆனந்த் அவர்கள் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். பின் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ். சுஸினா பாண்டிசேரியை சேர்ந்தவர். மேலும் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார். பின் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. மா.கா.பா ஆனந்த் அவரை திருமணம் செய்து கொண்டார்.

View this post on Instagram

Happy birthday baby ???

A post shared by MA KA PA Anand (@makapa_anand) on

தற்போது மா.கா.பா விற்கும், சுஸினாவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். மா கா பா ஆனந்த் அவர்கள் ஆர்.ஜே, வி.ஜே, திரைப்பட நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் முதலில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அதற்கு பிறகு ரேடியோ மிர்ச்சி பண்பலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். அதாவது இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு ரேடியோ மிர்ச்சி ஆக ஆறு வருடங்கள் பணி புரிந்தார். மா.கா.பா ஆனந்த் அவர்கள் பத்து வருஷம் ஆர்.ஜேவாக இருந்து தான் விஜய் டிவியில் ஆங்கர் ஆனார்.

இதையும் பாருங்க : அஜித்தின் அமைதிக்கு பின்னால் இருக்கும் சோகமான வலி – கோபிநாத் சொன்ன ரகசியம். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அதற்குப் பிறகு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், அது இது எது, சினிமா காரம் காபி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது நடிகர் மா கா பா ஆனந்த் உலக அளவில் மிகப் பிரபலமான கேம்சோ நிகழ்ச்சியான “தி வால்(the wall)” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் 2014ம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு, பஞ்சு மிட்டாய், மாணிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது கூட மா கா பா ஆனந்த் அவர்கள் படங்களில் நடித்துக் கொண்டும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னாடி மா கா பா ஆனந்த் அவர்களின் மனைவி பிறந்த நாள். இதற்கு ரசிகர்கள் எல்லோரும் மா கா பா ஆனந்த் மற்றும் அவருடைய மனைவி இருக்கிற மாதிரி போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement