இப்படி எல்லா வீடியோலையும் கெஞ்சுறனே, அத திருப்பி கொடுத்துட்டு – திருடனிடம் கெஞ்சிய மணிமேகலை

0
55
- Advertisement -

பைக் திருடனிடம் விஜய் டிவி மணிமேகலை கெஞ்சி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் மூலமா இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. இருந்தாலும் இவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் இவர் கடந்த நான்கு சீசனாக கோமாளியாக இருந்தார். தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசனில் மணிமேகலை தொகுப்பாளராக இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் ஹுசைன் கஷ்டப்பட்டு KTM பைக் ஒன்றை வாங்கி இருந்தார்கள். அதனுடைய மதிப்பு 2 இலட்சம். ஆனால், அந்த வாகனம் வாங்கி சில மாதங்களிலேயே திருடு போனது அனைவருக்கும் தெரிந்ததே.

- Advertisement -

மணிமேகலை வீடியோ:

தற்போது மணிமேகலை மீண்டும் ஒரு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது வாங்கி 9 மாதங்கள் ஆன பிறகுதான் பூஜை போட்டு இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலை, இந்த ஸ்கூட்டர் டயர் ஆரஞ்சு கலரில் இருக்கிறது. இது பார்க்கும்போதே எங்களுக்கு அந்த கேடிஎம் பைக் தான் நினைவுக்கு வருகிறது. இப்படி எல்லா வீடியோக்களிலும் கெஞ்சுகிறேன். இப்போவாவது அந்த திருடன், நான் தான் எடுத்தேன் என்று வந்து சொல்கிறானா பாரு என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

மணிமேகலை பைக் திருடு போன சம்பவம்:

மணிமேகலை தங்களுக்கு சொந்தமான பைக்கை தன்னுடைய நண்பரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக மணிமேகலை போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், மணிமேகலை அந்த பைக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, என்னுடைய நண்பர் வீட்டில் வண்டியை நிறுத்தி இருந்தோம். கல்யாணத்திற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு காசு சேத்து வச்சு வாங்கின முதல் வண்டி. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்து தான் வருவதோ என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

மணிமேகலை- உசேன் திருமணம்:

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர். மணிமேகலை திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

மணிமேகலை நடத்தும் யூடுயூப் சேனல்:

அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இன்னொரு பக்கம் இவர் இந்த யூடுயூப் சேனலை நடத்தி வருகிறார். இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். தற்போது இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் ஏன்று சொல்லலாம்.

Advertisement