விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.
மைனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியானது. நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.கடந்த சில மாதங்களாக நடிகை மைனா தான் கற்பமாக இருந்து வந்தார். சமீபத்தில் தான் இவருக்கு மிகவும் எளிமையாக சீமந்தம் கூட நடந்து முடிந்தது. மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
சமீபத்தில் கூட தனது லோகேஷ் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். குழந்தை பிறந்ததற்கு பின்னர் நடிகை மைனா தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இப்படி ஒரு மீண்டும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் நந்தினி.இது சீரியலா,ஏதேனும் ஷோவில் நடுவராக வருகிறாரா என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.