ஆல்யாவை தொடர்ந்து மைனா நந்தினியும் இரண்டாம் முறையாக கர்ப்பமா ? புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து.

0
2817
myna
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மைனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணமும் செய்து கொண்டார் மைனா நந்தினி.

இதையும் பாருங்க : ந்த நடிகையை தான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன் (இத உங்க wife பாத்தா என்ன ஆகும் ராஜு பாய் )

- Advertisement -

நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் போட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் மைனா, தான் முதன் முறையாக கர்ப்பமாக இருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை எதார்த்தமாக பதிவிட்டார். அதை பார்த்தே பலரும் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரபல விஜய் டிவி ஜோடியான சஞ்சீவ் – ஆல்யா இரண்டாம் குழந்தை பிறக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் லைவ் ஒன்றில் பேசிய சஞ்சீவ் ‘விரைவில் அய்லா 2 வரப் போகிறது’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் ரசிகர்கள் பலரும் மைனா நந்தினியின் இந்த பதிவை பார்த்து குழப்பி போய் இப்படி கமன்ட்டுகளை போட்டு வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement