ஷூட்டிங்ல எத்தனை முறை சொன்னேன், நீங்க கேக்கல – கொரோனாவால் இறந்த விஜய் டிவி பிரபலம். பிரபலங்கள் கண்ணீர்.

0
5051
dd
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .

-விளம்பரம்-

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்ட்டனர். சமீபத்தில் கூட ஆஜீத், கேபி, சென்றாயன், அஸ்வின் என்று பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதையும் பாருங்க : வயதுக்கு மீறிய போஸ் கொடுத்த மௌன ராகம் சீரியல் நடிகை – ராட்சசன்ல எப்படி இருந்தாங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கொரோனா பாதிப்பால் விஜய் டிவியின் முக்கிய பிரபலம் பலியாகியுள்ள சம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தயாரிப்பு மேற்பார்வையாளருமான நிர்மலா என்பவர் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார்.

இவரின் இறப்பிற்கு பல விஜய் டிவி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள சீரியல் நடிகை சரண்யா துரடி, இன்னும் எத்தனை இழப்பை பார்க்க வேண்டி இருக்கோ தெரியல. ஷூட்டிங்கில் சரியாக சாப்பிடுங்கள் என்று நானே உங்களுக்கு பல முறை சொல்லி இருக்கிறேன். உங்கள் உடம்பில் நீங்கள் அக்கறை எடுத்து இருக்கனும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement