தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகப் போகும் விஜய் டிவி சீரியல் குறித்து தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மட்டும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் அந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
விஜய் டிவி சீரியல்கள்:
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி, ஆஹா கல்யாணம் போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில், சிறகடிக்க ஆசை சீரியல் எப்போதும் டிஆர்பி யில் டாப்பில் இருப்பது குறிப்பிடதக்கது. இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடும் நிலையில், ஏற்கனவே தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை- தெலுங்கு ரீமேக்:
சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. இதில் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஏற்கனவே தெலுங்கில், ‘Gundeninda Gudigantalu’ என்ற பெயரில் ரீமேக் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது.
ரீமேக் ஆகும் மற்றொரு சீரியல்:
தெலுங்கில், ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் விஷ்ணுகாந்த் மற்றும் அமுல்யா கௌடா முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியல் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறதாம். அதாவது, விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலின் முதல் பாகம், கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தெலுங்கு ரீமேக்:
இந்த சீரியல் முழுக்க முழுக்க அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்துக் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகிறார்கள். தற்போது இந்த சீரியலை தெலுங்கில், ‘Illu Illalu Pillalu’ என்ற பெயரில் ரீமேக் ஆக இருக்கிறதாம். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.