தளபதி wig ஆவது வாங்கி வச்சி இருக்கலாம் இல்ல’ – விஜய் குறித்து பேசி பிரச்சனையில் சிக்கி கொண்ட பிரியங்கா

0
503
priyanka
- Advertisement -

நடிகர் விஜய்யின் Wig பற்றி பிரியங்கா பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.

-விளம்பரம்-

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் Wig குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரியங்கா. தற்போது விஜய் டிவியில் ராஜு ஊட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் ராஜு, மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் யோகி, தலைவா விஜய் கெட்டப்பில் வந்தார். அப்போது பிரியங்கா ‘தளபதி wig ஆவது வாங்கி வச்சி இருக்கலாம் இல்ல’

ரஜினி சார் wig டா இது என்று கூறி இருந்தார். அவர் hairstyle பார்க்க விஜய் மாதிரி இல்லையே என கூற, அது இப்பொது சமூக ஊடங்களில் அவர் விஜய் wig வைக்கிறார் என கூறியது போல தவறாக மாறியுள்ளது. இதனால் இந்த வீடியோவை ட்விட்டர் வாசிகள் சிலர் பகிர்ந்து யுனிவர்சல் troll மெட்டிரியல் என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

விஜய்யின் முதல் படம் துவங்கி தற்போது வரை அவரது உருவத்தை பற்றிய பல விமர்சங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு படங்களில் ஒரிஜினல் முடி வைத்து நடிக்கவில்லை என்ற பல கேலி கிண்டல் இருக்கத்தான் செய்து வருகிறது. பீஸ்ட் படத்தின் போது நடிகர் விஜய் , சன் டிவியில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது கூட அவரது முடி வித்யாசமாக இருந்தது.

. அவரது முகத்தை விட அவரது முடி பெரிதாக தெரிவிதால் இந்த லுக் ஏதோ எடிட் செய்யப்பட்டது போலவும், கிரீன் மேட் பயன்படுத்தி Vfx செய்தது போல இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சமீப காலமாகவே அடிக்கடி வித்யாசமான ஹேர் ஸ்டைலில் தான் இருந்து வருகிறார். ஒரு சிலர் இதை விக் என்று சொன்னாலும் விஜய் ரசிகர்கள் பலரும் அது ஒரிஜினல் முடி தான் என்று கூறி வருகின்றனர்.

Advertisement