இரவு 12 மணிக்கு என் கணவர் பேசிட்டு இருப்பாரு. மேடையில் போட்டுடைத்த நடிகை குஷ்பு.

0
11261
- Advertisement -

“மீசையை முறுக்கு, நட்பே துணை” உள்ளிட்ட படங்களில் நடித்த ஹிப் ஆதி ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் நான் சிரித்தால். இந்த படத்தை அவ்னி மேக்ஸ் சார்பாக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா அவர்கள் தான் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ‘தமிழ் படம் 2’வில் நடித்த ஐஸ்வர்யா மேனன் நடித்து உள்ளார். இவர்களுடன் இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மேலும், இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசை அமைத்து உள்ளார். படத்திற்கு ஓளிப்பதிவு செய்தவர் வாஞ்சிநாதன் முருகேசன்.

-விளம்பரம்-

வீடியோவில் 4 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

- Advertisement -

மேலும், நான் சிரித்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதற்காக வெற்றி சந்திப்பை நடத்தி உள்ளார்கள் படக்குழுவினர். இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, இயக்குனர் ராணா, நடிகர்கள் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கேஎஸ்,ரவிகுமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை குஷ்பு அவர்கள் சமீபத்தில் நடந்த நான் சிரித்தால் படத்தின் வெற்றி விழாவில் எனக்கு சக்காளத்தி ஆதி தான் என்று பேசியிருந்தார். இப்படி இவர் பேசிய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80,90 கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ.

இதையும் பாருங்க : பிரசவத்திற்கு பின் உடல் எடையை ஏன் மறைக்கிறீர்கள்? சமீரா வெளியிட்ட புகைப்படம் குவியும் லைக்ஸ்

-விளம்பரம்-

இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இவர் வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களிலும். சின்னத்திரை சீரியல்களிலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார் குஷ்பூ. இவர் தற்போது ஆதி நடித்த நான் சிரித்தால் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் குஷ்பூ பேசியது, இது நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த சினிமா மேடை. இந்த அவ்னி மேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம் எங்களுக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். நானும் என் கணவரும் சிறு வயதில் இருந்தே சினிமாவில் தான் இருக்கிறோம். தயாரிப்பை பொறுத்தவரை எல்லாமே என்னுடைய கணவர் சுந்தர் தான் செய்கிறார்.

நாங்கள் இருவருமே சினிமாவை மிகவும் நேசிக்கிறோம். எங்களுடைய மூச்சு எல்லாமே சினிமா தான். எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை. அதுமட்டுமில்லாமல் ஹிப் ஹாப் தமிழா ஆதி எங்களுக்கு ஏற்கனவே பழக்கம். நெருங்கிய நண்பன் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் ஹிப் ஹாப் ஆதியும், சுந்தர் சியும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். சொல்லப்போனால் ஹிப் ஹாப் ஆதிக்கு என் சின்ன மகள் மிகப்பெரிய ரசிகை. ஆதி ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்க வந்தவர். தற்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டார். நான் தூக்கத்தில் எழுந்து பார்த்தால் கூட சுந்தர் சி ஆதியுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். அதனால் என்னுடைய சக்காளத்தி ஆதி என்று கூட சொல்லலாம் என்று வேடிக்கையாகக் கூறினார் குஷ்பூ.

Advertisement