நான் மீண்டும் விஜய் டீவிக்கு வரணும்னா இத தான் எதிர் பார்க்கிறேன் – ரம்யாவின் ஆசையை பாருங்க.

0
1650
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.

Ramya Subramanian Biography, Wiki, DOB, Family, Profile, Movies list

பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : இது ஆரிக்கு பெரும இல்ல, ஆரி ஓட்ஸ்ல Final போறதுக்கு பதில் – ஆரியின் ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி.

- Advertisement -

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ரம்யா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் எப்போது உங்களை தொகுப்பாளினியாக விஜய் டிவியில் பார்க்கலாம் ? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ரம்யா அதைப்பற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை. நான் விஜய் டிவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்னால் நான் பண்ணாத ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி மூலம் மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement