வாட்ஸ் அப்பில் திருடன் பட்டம், கடன் தொல்லை. ரோட்டோர மரத்தில் தூக்கில் தொங்கிய கணவர். வேதனை பகிர்ந்த ரஜினி பட நடிகை.

0
6951
ragavi

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ஷாலினியின் அக்காவாக நடித்தவர் நடிகை ராகிவி. அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஒரு ஒன்றரை ஆண்டுக்கு முன் இவரது கணவர் ரோட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் கொலையா இல்லை தற்கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

This image has an empty alt attribute; its file name is raghavi-241019m.jpg

மேலும், ராகவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராகவியின் கணவர் சசிகுமார் சினிமா திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியலில் ஒளிப்பதிவு செய்யும் கேமராமேனாக பணியாற்றி வந்தவர். இவருக்கு சமீபகாலமாகவே கடன் தொல்லை அதிகமாக இருந்தது. பின்னர் தான் பணிபுரிந்த ஸ்டுடியோவிருக்கு சொந்தமான கேமராவை அடகு வைத்து விட்டார் என்று சசிகுமார் மீது புகார் கூறப்பட்டிருந்தது.

இதையும் பாருங்க : அடுத்தவங்க உழைப்பை திருடறதுக்கு பேரு – வலிமை அப்டேட் குறித்து வானதி ஸ்ரீனிவாசன் போட்ட பதிவு. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

மகேஷ் என்பவர் சசிகுமாரை ‘கேமரா திருடன்’ என வாட்ஸ் அப்பில் பதிவு செய்துள்ளார். மேலும், இவருக்கு கடன் தொல்லையும் இருந்து இருக்கிறது, இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார் சசி குமார்.கடன் தொல்லை மற்றும் திருட்டுப் பழி ஆகிவற்றால் தான் சசி குமார் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ராகவி, . என்ன கஷ்டமானாலும் எங்கிட்டஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நிச்சயம் அவரை அதிலிருந்து நான் மீட்டு கொண்டு வந்திருப்பேன்யாரோ ஒருத்தருக்காக அவர் எங்களைப்பத்தி யோசிக்காம முடிவு எடுத்துட்டார். என்னுடைய கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் இந்த வலி எனக்கு இருக்கும். என் கணவர் விஷயத்துல யார் தப்பு பண்ணினாங்களோ, அவங்க நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகணும் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement