நீண்ட இடைவெளிக்கு பின் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ரீமா – அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
1146
rhema
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் ராஜா ராணி, அரண்மனை கிளி,மௌன ராகம், பாரதிகண்ணம்மா, சிவா மனசுல சக்தி என்று திரைப்பட டைட்டில்களை வைத்து ஒளிபரப்பான பல்வேறு சீரியல்கள் மாபெரும் வெற்றியடைந்தது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த சின்னதம்பி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் 442 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமான தொடராக திகழ்ந்து வந்தது.

-விளம்பரம்-

ப்ரஜின் மற்றும் பவானி ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த தொடரில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரீமா அசோக். இந்த தொடர் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலத்தை பெற்ற இவர் முதன் முதலில் சீரியல் நடிகையாக அறிமுகமானது கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘களத்து வீடு’ என்ற தொடர் மூலம் தான்.

இதையும் பாருங்க : ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் குறித்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கை.

- Advertisement -

இந்த தொடரை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, ரெக்கை கட்டி பறக்குது மனசு போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் ரீமா. மேலும், ஜோடி பன் அன்லிமிடேட் நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக நடனமாடி இருந்தார். இறுதியாக ‘பொன்மகள் வந்தால் ‘ தொடரில் நடித்து வந்தார். பல்வேறு சீரியல்களில் நடித்த இவரை கடந்த சில மாதங்களாக எந்த சீரியலிலும் காண முடியவில்லை.

இப்படி ஒரு நிலையில் புதிய சீரியலில் ரீமா என்ட்ரி கொடுக்க உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரீமாவும் தன இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஆனால், அந்த சீரியலின் பெயரை ரீமா வெளியிடவில்லை. தற்போது இவர் விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராஜா நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement