நீயெல்லாம் பிள்ளைய பெத்து என்ன பண்ண போற – வீடியோ பதிவிட்டதால் சமீராவை திட்டி தீர்த்த நெட்சன்கள். அவரின் பதிலடி வீடியோ.

0
11185
Sameera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய `பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர் சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள். 700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஜோடியும் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்கள். அன்வர்– சமீரா காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது.ரியல் காதலர்களாக இருந்த அன்வர்– சமீரா பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்ததால் அந்த சீரியல் செம ஹிட்.

இதையும் பாருங்க “: உடல் எடையை குறைச்சுட்டேன் – படு மாடர்ன் உடையில் லட்சுமி ராமகிருஷ்னன் வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

பகல் நிலவு சீரியலுக்கு பின் சமீரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் யூடுயூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘நாங்கள் இனி கணவன் மனைவி’ இல்லை என்று தலைப்பை வைத்திருந்தனர். இதை பார்த்த பலர் என்ன எதோ என்று பதறிப்போய் அந்த வீடியோவை பார்த்தால், சமீரா கர்ப்பமாக இருப்பதை சொல்லத்தான் இருவரும் இப்படி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்களாம்.

கர்ப்பமாக இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். கிரிக்கெட் விளையாடுது, நடனமாடுவது, மொபைலில் வீடியோ எடுத்து பதிவிடுவது என்று தற்போதும் இயல்பாக இருந்து வருகிறார். இதற்கு பலர் லைக்ஸ் போட்டாலும் பெரும்பாலோனோர் கர்ப்பமாக இருக்கும் போது செல் போன் பயன்படுத்தினால் கதிர் வீச்சால் பாதிக்கப்படுவீர்கள் என்று பல விதமான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் கடுப்பான ஒரு சிலரோ, குழந்தை இருக்குடி லூசு என்றும் மற்றொருவரோ, கர்ப்பமாக இருக்கறப்ப கூட வீடியோ போடணும். அவ்ளோ பைத்தியம். நீயெல்லாம் பிள்ளயா பெத்து என்ன பண்ண போறேன்னு தெரியல என்று பதிவிட்டு இருந்தார். இந்த எல்லா நெகட்டிவ் கமெண்டுகளுக்கும் பதில் அளித்த சமீரா. எனக்கு குழந்தை இருக்குன்னு எனக்கு தெரியும். என் குழந்தைக்கு எது நல்லது என்பது எனக்கு தெரியும். நான் கர்ப்பமாக இருப்பதால் நான் டான்ஸ் ஆட கூடாது, வீடியோ போட கூடாதுனு கிடையாது. அது என் குழந்தை அத எனக்கு பாத்துக்க தெரியும் என்று கூறியுள்ளார்.

Advertisement