குக்கு வித் கோமாளியில் வைல்ட் கார்டாக நுழைந்த விஜய் டிவி சீரியல் நடிகை – யார் தெரியுமா ?

0
1403
cwk
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க :யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ – 7 மொழிகளில் வெளியான மாநாடு படத்தின் டீசர்.

- Advertisement -

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.இந்த சீசன் இந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமே இந்த சீசனில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா,ஷிவாங்கி , மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை ரித்திகா என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக வைல்ட் கார்ட் என்றாலே அதில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் தான் மீண்டும் என்ட்ரி கொடுப்பார்கள். ஆனால், இப்படி ஒரு புது போட்டியாளரை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்கி ரசிகர்களையும் போட்டியாளர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குக்கு வித் கோமாளி குழு.

-விளம்பரம்-
Advertisement