நான் என்ன வேல இல்லாமய இருக்கேன். நான் ஏன் பேட்டி தரனும் – கடுப்பான தேன்மொழி சீரியல் ஹீரோ. வீடியோ இதோ.

0
5905
thenmozhi
- Advertisement -

சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த் மேனன். இவர் தொலைக்காட்சி நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று சின்னத்திரைக்கு நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் என் பெயர் மீனாட்சி, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, ஆபீஸ், ரெக்க கட்டி பறக்குது மனசு போன்ற பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்ற தலைவர் என்ற தொடரில் அருள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த தொடர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த தொடர். இந்த தொடர் நிம்கி முகியா என்கிற இந்தி தொடரின் தமிழாக்கம். கொரோனா காரணமாக இந்த தொடர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் அவர்கள் சமீபத்தில் வீடியோகால் மூலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு சித்தார்த் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : இப்போ தான் கேள்விபட்டேன் – வனிதா மூன்றாவது திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ரியாக்ஷன்.

- Advertisement -

அப்படி என்ன தான் கேள்வி கேட்டார் என்று பார்த்தால், நீங்கள் பொதுவாகவே இன்டர்வியூ யாருக்கும் தர மாட்டேங்கீறிங்களே. உங்கள் வீடியோவும் கம்மியாகத்தான் இருக்கு என்று கேட்டதற்கு சித்தார்த் அவர்கள் கூறியது, எதற்கு நான் இன்டர்வியூ தரவேண்டும். நான் இன்டர்வியூ தந்தால் நீங்கள் அதற்கு லைக், கமெண்ட் ,விமர்சனம் தெரிவித்து இருப்பீர்கள். உங்க பேஜ் லைக்குகளை அல்லனும். நான் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந்துட்டு இருக்கோம. உடனே தொகுப்பாளினி நீங்கள் இன்டர்வியூ தந்தால் உங்களைப் பற்றி நிறைய விஷயம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

அதற்கு சித்தார்த், என்னை பற்றி தெரிந்து என்ன செய்ய போறீர்கள். நான் என்ன பண்ணறேனோ அத மட்டும் தெரிஞ்சா போதும். என்ன பத்தி தனி பட்ட விசயம் தெரிஞ்சு நீங்கள் என்ன பண்ண போறீங்க. இது ரொம்ப முக்கியமா. நாடே கொரோனாவால் தத்தளித்து கொண்டு இருக்கும் போது இப்ப இந்த இன்டர்வியூ ரொம்ப முக்கியமா. நீங்க மாஸ்க் கூட போடாம உக்காந்து இன்டர்வியூ எடுத்துட்டு இருக்கீங்க என்று கடுமையாகப் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement