இப்போ தான் கேள்விபட்டேன் – வனிதா மூன்றாவது திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ரியாக்ஷன்.

0
1963
lakshmi

நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரும் ஆன வனிதா பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை அதாவது 27 ஆம் தேதி தனது வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் மேலும் பீட்டர் பவுல் கிறிஸ்துவர் என்பதால் இந்த திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ வை கூட வெளியிட்டிருந்தார் வனிதா

vanitha

வனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். மேலும்,இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவரது மகன் மட்டும் வனிதாவை பிரிந்து தனியாக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில்தான் வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டருக்கும் திருமணம் முடிந்து ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பது இவர் மனைவி அளித்த புகார் மூலம் தெரியவந்தது.

இதையும் பாருங்க : சூர்யாவிற்கு வில்லனாக விஜய் – இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டரே சூர்யா. எந்த படம் தெரியுமா ?

- Advertisement -

அவர் அளித்த புகாரில், ட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்தார். பீட்டர் பாலும், அவரது மனைவி எலிசபெத்தும் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/LakshmyRamki/status/1277171553679990785

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் இப்படி ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement