நயன்தாரா மேடமா இருந்தாலும் கால் மேல கால் போட்டு ஒக்காராதீங்க – நடிகரின் பேச்சால் சர்ச்சை. (யார் தெரியுதா)

0
11741
nayan
- Advertisement -

சமீபத்தில்  ‘சாயம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய் விஷ்வா (முன்னர் அபி சரவணன் என்று பெயர் வைத்து இருந்தார்) நாயகனாக நடித்து உள்ளார். அந்தோணி சாமி இயக்கி இருக்கும் இந்த படத்தில் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

-விளம்பரம்-

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்யின் ஜாதி சான்றிதழ் குறித்து எஸ் ஏ சி பேசியது பெரும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இதே நிகழ்ச்சியில் இந்த படத்தின் நாயகன் விஜய் விஷ்வா, நயன்தாரா குறித்து பேசியதும் தற்போது சமூக வலைதளத்தில் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இந்த விழாவில் பேசிய அவர், என் பக்கத்தில் ஒரு ஹீரோயின் உட்கார்ந்திருந்தார் அவரது பெயர் எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் சொன்னேன் நீங்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்டேன்.

அதற்கு அவர் ‘எனக்கு இதுதான் கம்போர்ட்டாக இருக்கிறது என்று சொன்னார். ஆனால், நான் ஸ்டேஜில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று சொன்னதும் அவர் சாதாரணமாக அமர்ந்து விட்டார், அதை பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம் தான். இது என்னுடைய ஒரு தாழ்மையான வேண்டுகோள். நயன்தாரா மேடமாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி ஸ்டேஜில் கால் மேல் கால் போட்டு உட்காராமல் இருந்தால் நல்லது. ஒருவேளை உங்களுக்கு உங்கள் டிரஸ் கம்பர்டபுளாக இல்லை என்றால் வேறு ஏதாவது செய்யுங்கள். இது என்னுடைய வேண்டுகோளாக இந்த ஸ்டேஜில் நான் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement