தியேட்டரில் எழுந்து நின்று கையை நீட்டி கொண்டாடி பார்த்த விஜய் – வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம். என்ன படம் தெரியுமா ?

0
525
- Advertisement -

தி ஈக்வலைஸர் 3 படத்தை பார்த்து விஜய் என்ஜாய் பண்ணி இருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் வெளியாகும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

-விளம்பரம்-

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

- Advertisement -

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், சஞ்சய் மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் விஜய் உடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

தளபதி 68-வது படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

தற்போது விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் விஜய் தோற்றத்தை வித்தியாசமாக காண்பிக்க 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவருடைய உடலை ஸ்கேன் செய்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் நினைத்தபடியே விஜயினுடைய தோற்றத்தை உருவாக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

பேன் பாயாக மாறிய விஜய்:

இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் விஜய் அங்குள்ள திரையரங்கம் ஒன்றில் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி ஈக்வலைஸர் 3’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறார். அப்போது அவர் டென்ஸல் வாஷிங்டன் காட்சி வரும்போது எழுந்து நின்று ஃபேன் பாயாக தன்னுடைய கைகளை விரித்து கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். இதை தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாக்கி தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த புகைப்படத்தை எடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement