அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலன் மஸ்க்கின் சுயசரிதை தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் தன்னுடைய திருநங்கை மகளுடனான பிரிவு பற்றி குறிப்பிட்டு இருந்தர். அவரின் மகளை தனியார் பள்ளி இன்று முளைசலவை செய்து அவளை அவ்வாறு மாற்றி விட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அந்த சுய சரிதையில் அவர் மகள் குறித்து கூறுகையில் “நான் திருநங்கை, தற்போது என்னுடைய பெயர் இப்போது ஜென்னா. என் அப்பாவிடம் சொல்லாதே’ என்று அவரது மகள், அவரது சகோதரனின் மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.’’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
எலன் மஸ்க்:
எலன் மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்காராகா இருந்து வருகிறார். இவருக்கு 240.7 டாலர் பில்லியன் அளவிற்கு சொத்துக்கள் உள்ளது. இவர் தற்போது SpaceX நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முக்கிய பணியாகும்.
மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும். அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலான் மஸ்க். இவர் சில மாதங்களுக்கு முன் உலகின் முன்னணி நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் பல மாற்றங்களை செய்துள்ளார். இவர் தற்போது அவரின் சுயசரிதையில் அவரின் மகள் குறித்து உருக்கமாக எழுதி இருந்தார்.
மகள் குறித்து அவர் கூறியது:
பொதுவாகவே மகள் என்றால் அப்பாக்களுக்கு மிகவும் பிரியமாக இருப்பார்கள். மகளுடைய பிரிவுகளை ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும். அந்த வகையில் தான் உலகின் நம்பர் 1 பணக்காரண எலன் மஸ்க் தற்போது இருந்து வருகிறார். தன் மகள் தன்னைவிட்டு பிரிந்தது பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் அவர் பெரிய பெரிய நிறுவங்களை எவ்வாறு கைப்பற்றினார் என்றும் அவரின் சுய சரிதையில் குறிபிட்டுள்ளார். தான் திருநங்கையாக மாறிவிட்டேன் எனவும் எனது பெயர் விவியன் ஜென்னா வில்சன் என்றும் எலன் மாஸ்கின் சகோதரன்னின் மனைவிக்கு செய்தி ஒன்று அனுப்பியுள்ளார்.
இதனை தன்னுடைய அப்பாவிடம் சொல்லிவிடதே என்றும் கூறியுள்ளார். ஜூன் 2020 -ல் கலிபோர்னியா நீதிமன்றம் 18வயது நிறைவடைந்த தன்னுடைய மகளை சட்டப்பூர்வமாக தனது பெயரை “விவியன் ஜென்னா வில்சன்” என்றும், கடந்த ஆண்டு அவரது பாலினத்தை பெண் என்றும் அவர் மற்றியுள்ளார். அவள் தன்னுடைய பெயருக்கு பதில் அவளுடைய அம்மா பெயரை பின்னாடி இணைத்து கொண்டாள். அவருக்கு புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டது. அவளது முடிவில் அவள் பிடிவாதமாக இருந்தாள்.
அவளது முடிவு தந்தையுடன் வாழ விரும்பவில்லை எனக்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதில் தெளிவாக இருந்தாள். அவள் முழுவதும் பணகார்களுக்கு எதிரான கம்யூனிஸ்டாக மாறினாள். பணகார்களை எல்லாம் தீயவர் என்று நினைத்து வருகிறாள். பணத்தை தீமைக்கு சமம் என்று அவள் நினைக்கிறாள். அதக்கு முழுவதும் காரணம் அவள் படித்த தனியார் பள்ளி தான். அது தான் அவளுக்கு மூளை சலவை செய்து இவ்வாறு மாற்றிவிட்டது. அவளை மீண்டும் என்னுடன் சேர்க்க பல முறை முயற்ச்சி செய்தேன். ஆனால் அவளுடைய பதில் தன்னிடம் இருந்து பிரிந்து இருப்பதாகவே இருந்தது. அவளுக்கு தன்னுடன் இருப்பது பிடிக்கவில்லை என்றும் மனம் உருகி தன்னுடைய சுய சரிதையில் எழுதியிருந்தார்.