விஜய் திருமண நாள் ஸ்பெஷல் : விஜய் திருமணத்தில் கார்த்தி. வைரலாகும் புகைப்படம்.

0
3420
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

- Advertisement -

சினிமா துறையில் பிரபலமான இயக்குனரின் மகனாக விஜய் இருந்தாலும் அவருடைய படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியில் தான் முடிந்தது. பின்னர் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்று பார்த்தால் “பூவே உனக்காக” படம் தான். இந்த படத்திற்கு பின் தான் விஜய் அவர்களுக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் வர தொடங்கின. பின்னர் விஜய்க்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமும் கூடியது.

View this post on Instagram

Happy Wedding Anniversary #Vijay #Sangeetha

A post shared by Behind Talkies (@behindtalkies) on

மேலும்,விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. இன்று விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் திருமணத்தில் கார்த்தி கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement