பொன்னியின் செல்வன் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன்,ஆனா இப்படி பண்ணிடாங்க – விஜய் யேசுதாஸ் வருத்தம்.

0
1873
VijayYesudas
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தும் திரையில் தெரியவில்லை என்று வருத்தத்துடன் விஜய் யேசுதாஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இதனை பல பேர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து பாடகர் விஜய் யேசுதாஸ் பேட்டி ஒன்று எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்தினம் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நபர் ஒருவர் எனக்கு தெரியும். அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

விஜய் ஏசுதாஸ் அளித்த பேட்டி:

அதோடு அவர் இந்த படத்தின் இரண்டாவது இயக்குனர் ஆவார். அவர் இயக்குனர் மணிரத்தினதிடம் இந்த பட்டத்தில் நடிப்பது பற்றி சொல்லி வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் என் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறினார்கள். நானும் ஒப்புக்கொண்டேன். நீளமாக வளர்த்திருந்த தாடியை மட்டும் எடுப்பதற்கு சம்மதிக்கவில்லை. அதன் பிறகு கதாபாத்திரத்திற்கு ஏற்ற என்னை புகைப்படம் எடுத்து மணிரத்தினம் இடம் காட்டினார்கள்.

பொன்னியின் செல்வன் படம் குறித்து சொன்னது:

அவரும் சரி என்றார். அதற்கு பிறகு படகில் பயணிப்பது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது. பின் நான் திரும்பி வந்துவிட்டேன். அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் என்னை வர சொன்னார்கள். குதிரையில் சவாரி செய்ய வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் விக்ரமும் அருமையாக குதிரை சவாரி செய்தார். அதன் பிறகு படம் வெளியான போது பார்த்தால் என்னுடைய காட்சி படத்திலிருந்து இடம்பெறவில்லை. நான் படத்தில் இல்லை. மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருந்தும் அவரது படத்தில் வெளியே தெரியாமல் போனது என்னுடைய துரதிஷ்டம் என்று வேதனையில் கூறியிருந்தார்.

Advertisement