“எல்லாரோட பேரையும் போடுவீங்க ஆனா – Sun Pictures மீது அதிருப்தி அடைந்த விஜய் யேசுதாஸ்.

0
453
vijay
- Advertisement -

தனுஷின் படத்தின் பாடலில் தன்னுடைய பெயர் இடம் பெறாதது குறித்து பாடகர் விஜய் ஏசுதாஸ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. தற்போது தனுஷ் அவர்கள் நானே நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Thiruchitrambalam

கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

திருச்சிற்றம்பலம் படம்:

அதன் பின் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் குறித்த தகவல்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் விஜயின் பீஸ்ட் பட வசூலை முந்தி அடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பாடலில் தன்னுடைய பெயர் இடம் பெறாதது குறித்து பாடகர் விஜய் ஏசுதாஸ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

திருச்சிற்றம்பலம் பாடல்:

அதாவது, திருச்சிற்றம்பலம் படத்தில் கண்ணீர் சிந்தா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் தனுஷ், ராசி கண்ணா, நித்யா மேனன் என படத்தின் பிரபலங்களின் பல பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆனால், இந்த பாடலை பாடியவர் விஜய் ஏசுதாஸ். இவருடைய பெயர் மற்றும் இடம்பெறவில்லை. இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் விஜய் ஏசுதாஸ் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

விஜய் ஏசுதாஸ் கமன்ட் :

அதில் அவர், எல்லோருடைய பெயரையும் போடுவீங்க. ஆனால், அந்த சிங்கருடைய பெயரை மட்டும்! அமேசிங் @ சன் பிக்சர்ஸ் என்று சொல்லிட்டு கைதட்டல் இமோஜை பதிவிட்டு இருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு படக்குழுவினர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement