முழுசா தெரியாம அதை பற்றி பேசக்கூடாது – சர்ச்சையை ஏற்ப்படுத்திய சாய் பல்லவியின் Bjp விஜயசாந்தி கண்டனம்.

0
572
vijayashanthi
- Advertisement -

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலையும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலும் வன்முறையே என சுட்டிக்காட்டி பேசிய சாய் பல்லவியின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார் நடிகையும் , பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து தற்போது சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விராட பருவம் படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-79.png

இதனை தொடர்ந்து இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய்பல்லவி மற்றும் படக்குழுவினர் இறங்கி இருந்தனர். சமீபத்தில் சாய்பல்லவி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் கொலை செய்யப்படுவதாக காட்டி இருப்பார்கள்.இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், கொரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்று தான்.

இதையும் பாருங்க : கொங்கு மட்டன் பிரியாணி, மதுரை கறிதோசை, விக்ரம் சக்சஸ் மீட்டின் விருந்தை சமைத்தது இந்த நடிகர் தானா – இவரு Chef -ஆம்பா

- Advertisement -

சாய் பல்லவியின் கருத்து :

இரண்டுமே தவறு தான் என்று கூறியிருந்தார். இப்படி சாய்பல்லவி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல  இந்துத்துவா ஆதரவாளர்கள், பாஜகவினர் உள்ளிட்ட பலர் சாய் பல்லவியின் கருத்துக்களை விமர்சித்து வருகின்றனர். சாய் பல்லவி மீது நடிகை சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-392.jpg

சாய் பல்லவி மீது புகார் :

ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புதன்கிழமை புகார் அளித்ததுள்ளார். அந்த புகாரில், நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம் என்று ஒப்பிட்டு பேசியது தவறு என்றும் நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.

-விளம்பரம்-

விஜயசாந்தி கண்டனம் :

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் கருத்திற்கு நடிகையும், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பசுக்கள் கொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும் ஒன்றல்ல. நீங்கள் சற்று சிந்தித்து பார்த்தால் தெய்வீக பசுக்களை காப்பாற்ற பசுக்காவலர்கள் நடத்தும் போராட்டம் புரியும்.

இது ரெண்டும் ஒன்றா :

ஒரு தாய் தன் மகனை தவறு செய்வதற்காக அடிப்பதும், திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா? ஒரு பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்தால் மட்டுமே கருத்து சொல்லுங்கள். இல்லையென்றால் தள்ளி நிற்பதே சிறந்தது. பிரபலமாக இருக்கும் போது நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஏராளமானவர்களிடம் சென்றடையும். அதனால் சமூக உணர்வுடன் பதிலளிப்பது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.   

Advertisement