‘புரச்சிக்கனல், சூப்பர் ஹீரோ, மக்கள் திலகம்’ – பல பெயர்கள் கொன்ட கேப்டனின் 25, 50, 75, 100, 125, 150, படங்களின் டைட்டிலே கார்ட்ஸ் வைரல்

0
2309
- Advertisement -

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் அதன் பின்னர் ரஜினி கமலுக்கு இணையாக ஒரு ஹீரோவாக வலம் வந்தார்.

-விளம்பரம்-

மேலும், விஜயகாந்த முதலில் சினிமாவில் வில்லனாக தான் வலம் வந்தார். பின் செல்வராஜ் இயக்கத்தில் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விஜயகாந்த் காலத்தில் தான் கருப்பான நடிகர்கள் பலர் மக்கள் மத்தியில் விரும்பப்பட்டனர் என்று சொல்லலாம். அகல் விளக்கு படத்திற்கு பின்னர் விஜயகாந்த் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் அரசியல்:

இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இவரை தேடி யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அன்போடு அனுசரிப்பார். தன்னால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்வார்..இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலே போயிருக்கிறது. மேலும், இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த் பட்டப்பெயர்கள்:

தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜயகாந்த் அவர்கள் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் சினிமாவில் பல பட்டங்கள் வாங்கிய விஜயகாந்த் பட போஸ்டர்கள் தான் வைரலாகி வருகிறது.

வைரலாகும் டைட்டில் போஸ்டர்ஸ் :

பொதுவாகவே சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு என்று ஒரு அடைமொழி பெயர் இருக்கும். அந்த பெயர் ஒன்று அல்லது இரண்டு பெயர்கள் தான் பெரும்பாலுமே நடிகர்களின் பெயர்களுக்கு முன்னால் வரும். ஆனால், திரையுலகில் பல பட்டங்களுக்கு சொந்தகாரர் விஜயகாந்த்.
புரச்சிக்கனல்.
சூப்பர் ஹீரோ.
மக்கள் திலகம்.
புரச்சித்திலகம்.
எழுச்சிக்கலைஞர்
புரச்சிக்கலைஞர்
கேப்டன் என்று இன்னும் பல பெயர்கள் விஜயகாந்த்துக்கு இருக்கிறது. தற்போது பல பட்டங்கள் கொண்டு விஜயகாந்த் நடித்த 25, 50, 75, 100, 125, 150, படங்களின் போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

Advertisement