60 இயக்குனர்கள், 60 தயாரிப்பாளர்களை உருவாக்கியவர் கேப்டன் – கலங்கிய வல்லரசு பட இயக்குனர்.

0
339
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது.கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேப்டன் கடந்த 28 ஆம் தேதி காலமானார். கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. இன்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் விஜயகாந்த் நடித்த வல்லரசு படத்தின் இயக்குனர் மகாராஜன் அவர்கள் இரங்கலை தெரிவித்து பேட்டி அளித்தார். அதில் அவர், விஜயகாந்த் சார் நடித்த வல்லரசு படத்தில் தான் நான் அறிமுக இயக்குனர் ஆனேன். இந்த படத்திற்கு முன்னாடி கேப்டன் 120 படங்களுக்கு மேல் நடித்து மிகப்பெரிய பிரபல நடிகராக இருந்தார். நான் இந்த படத்திற்கு முன்னாடி கதாசிரியர், ரைட்டர் ஆக இருந்தேன். முதன்முதலாக விஜயகாந்தை வைத்து படம் பண்ண போகிறேன் என்றவுடன் எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது.

- Advertisement -

இயக்குனர் மகாராஜன் பேட்டி:

என்னுடைய பயத்தை பார்த்த கேப்டன், உன்னால பண்ண முடியும், தைரியமாக பண்ணு என்று என் தோளில் தட்டி கொடுத்து என் பயத்தை போக்கினார். முதல் நாள் பூஜை உடன் படம்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் தொடங்கி பல விஐபிகள் பூஜைக்கு வந்திருந்தார்கள். ஆனால், பூஜை அன்று மாங்காடு கோவிலுக்கு நான் குடும்பத்தோடு போயிருந்தேன். படபூஜை ஒன்பது மணிக்கு இருந்தது. கோவில் பூஜை முடித்துவிட்டு நான் வந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், ட்ராபிக்கில் மாட்டியதால் வருவதற்கு 11 மணி ஆகிவிட்டது. என்ன சொல்லுவாங்களோ? என்று பயமாக இருந்தது.

படப்பிடிப்பு அனுபவம்:

என்னை பார்த்து கேப்டன், வாப்பா கோவிலுக்கு போயிட்டு வரியா, யாராவது வந்து கேட்டுட போறாங்க அதற்கு முன்னாடி நீ பேப்பரை எடுப்பா டயலாக்கை சொன்னால் டேக் போலாம் என்று எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் ஒரு பெரிய நடிகர் என்று என்னைக்குமே உணர்ந்ததில்லை. அதனால் தான் அவரால் 60 இயக்குனர்களை, 60 தயாரிப்பாளர்களையும் உருவாக்கினார். கேப்டன் ரொம்ப சாதாரணமானவராக இருந்தார். எல்லோரையும் சமமாக பாக்குவார். அவருடைய அதீத அன்பே எனக்கு ஒரு கட்டத்தில் பயமாக மாறி இருந்தது. கேப்டனுக்கு கோபம் வந்தாலும் அந்த வினாடி தான் இருக்கும். அதற்கு பிறகு அவர் மறந்துவிடுவார்.

-விளம்பரம்-

கலைஞர்-விஜயகாந்த் நட்பு:

மேலும், இந்த படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சி ஒரு மவுண்ட் ரோட்டில் எடுததோம். ரொம்பவே பெரிய கூட்டத்தை வைத்து படப்பிடிப்பு நடந்தது. 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்பை முடிக்கணும் என்று நினைத்து தொடங்கினோம். ஆனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மவுண்ட்ரோடு வழியாக தான் சட்டசபைக்கு போவார் என்பதால் நாங்கள் எல்லாம் பதறி விட்டோம். ஏன்னா, கூட்டம் அதிகமாக இருந்தது. விஜயகாந்த் சார், பதராதீங்க நான் தலைவரிடம் பேசுகிறேன் என்று கலைஞருக்கு போன் செய்து பேசினார். அப்போது போனில் கலைஞர், விஜியா என்று கேட்டு நடந்ததை எல்லாம் விஜயகாந்த் சொன்னவுடன் நீ நடி, சூட் பண்ணிக்கோ, நான் ரூட்டை மாத்தி போய் கொள்கிறேன் என்று சொன்னார்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து சொன்னது:

அந்த அளவிற்கு நட்போடு விஜயகாந்த் இருந்தார். கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்று எனக்கு தெரிந்ததும் நல்ல மருத்துவர்களை அழைத்துக் கொண்டு போய் அவருக்கு வைத்தியம் செய்து பார்த்தேன். ஆனாலும், சரி வரவில்லை. என் பசங்களோட கல்யாணத்துக்கு அவரால் வர முடியவில்லை. நான் அவர் வீட்டுக்கு போய் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வந்தேன். என் மகனை கதாநாயகன் ஆக்க முயற்சி பண்ணி கொண்டிருந்ததை கேள்விப்பட்டு, நான் கெஸ்ட் ரோல் பண்றேன், என்ன கேரக்டர் என்று சொன்னார். அண்ணன் கேப்டன் இன்று நம்மோடு இல்லை என்கிற வருத்தம் இருந்தாலும் அவரை ஒரு அவதாரமாக தான் பார்க்கிறேன் என்று கண்கலங்கி இயக்குனர் மகாராஜன் கூறியிருக்கிறார்.

Advertisement