33வது திருமண விழாவை கொண்டாடிய விஜயகாந்த் – பிரேமலதா தம்பதி – வைரலாகும் புகைப்படங்கள்.

0
1133
- Advertisement -

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த். மேலும் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த ஒரே நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். கொரோனவின் போது கூட பல ஏழை மக்களுக்கு உணவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நலக்குறைவு :

மேலும் சினிமா திரையில் அனைவருக்கும் நல்ல உணவு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியவர் விஜயகாந்த் தான். அதனால் தான் இவரை புரட்சி கலைஞர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால், இவர் மக்களுக்கு உதவிய சமயத்தில் பெரிதாக ஊடகங்கள் இல்லாததனால் இவர் செய்த உதவிகள் எதுவும் வெளியே தெரியவில்லை. தற்போது இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது இவருடைய கட்சியை இவரது குடும்பம் தான் கவனித்து வருகிறது.

-விளம்பரம்-

திருமண நாள் :

கேப்டன் விஜயகாந்த் கடந்த 1990ஆம் ஆண்டு பிரேமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் விஜயகாந்த் தன்னுடைய 33வது திருமண நாளை நேற்று கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் விஜயகாந்த் மகன்கள், பிரேமலதா சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜயகாந்தின் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் விஜயகாந்த- பிரேமலதா தம்பதியருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement