மீண்டும் வாருங்கள்,அன்பு தம்பு அழைக்கிறேன். விஜயகாந்த் பிறந்தநாளுக்கு சரத்குமார் பதிவிட்ட வாழ்த்து வீடியோ

0
472
sarth
- Advertisement -

இன்று பிறந்தநாள் கொண்டாடிய விஜய்காந்துக்கு சரத்குமார் பதிவிட்டு உள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்து இருக்கிறது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை கலை நிகழ்ச்சிகள் மூலம் நடத்தி நடத்தி அடைத்து இருந்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்திருந்தார்.

- Advertisement -

விஜயகாந்த் அரசியல்:

மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். ஆனால், சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த் உடல்நிலை:

உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த் அவர்கள் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். கடந்த ஜுன் 14ம் தேதி விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-

விஜயகாந்த் பிறந்தநாள் :

ஆனால், விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்களும், பிரபலங்களுக்கும் அவருக்காக வேண்டி கொண்டனர். சமீபத்தில் கூட விஜயகாந்த் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து 75 வது சுதந்திர தின விழாவை தேசிய கொடியை ஏற்றி தன் கட்சி தொண்டர்களுக்கு கையசைத்து இருந்தார். இந்நிலையில் இன்று விஜய்காந்தின் பிறந்தநாள். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடிகர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சரத்குமார் பதிவிட்ட வீடியோ:

அந்த வகையில் நடிகரும், சமத்துவ கட்சியின் தலைவருமான சரத்குமார் அவர்கள் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வாழ்க்கையில் எந்த ஒரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர் விஜயகாந்த். அந்தப் போராட்ட குணம் உங்களிடம் உள்ளது. மீண்டும் உங்கள் ரசிகர்களுக்காகவும், எங்களைப் போன்ற சகோதரர்களுக்காகவும் புத்துணர்ச்சி பெற்று இந்த பிறந்தநாள் முதல் சிறப்பாக எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும். இந்த அன்பு தம்பி வேண்டிக்கொள்கிறேன். மீண்டும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement