ரஜினியின் வீட்டிற்கே சென்று தர்ணா செய்த கேப்டன், பதறிபோய் பின் சம்மதித்த ரஜினி – அதுவும் எதற்காக பாருங்க.

0
488
- Advertisement -

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்க தலைவர் ஆனதும் அதிலிருந்து விலகியதற்கான காரணமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த ஒரே நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். தற்போது இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசியலில் விஜயகாந்த்:

இந்நிலையில் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்க தலைவர் ஆனதும், அதிலிருந்து விலகியதற்கான காரணமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் சங்கம் பல வருடங்களாகவே வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அனைத்து பிரபலங்களுமே நடிகர் சங்கத்தை கைவிட்ட சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்று இருந்தார் அப்போது நடிகர் சங்க தலைவர் ராதா ரவி. பின் அவர் விஜயகாந்தை முதன்முறையாக அழைத்து வந்திருந்தார். கடந்த 2000 ஆண்டு நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்தை பொறுப்பில் அமர வைத்தார் ராதாரவி.

-விளம்பரம்-

நடிகர் சங்கத்தில் சேர காரணம்:

உடனடியாக நடிகர் சங்கத்தின் மீது இருந்த கடனை அடைப்பதற்கான முயற்சியை விஜயகாந்த் கையில் எடுத்தார். மேலும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளுக்கு சென்று அங்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடனை அடைக்க முயற்சி செய்தார். இதற்காகவே ஒவ்வொரு நடிகர்களையும் நேரில் சென்று அழைத்து இருந்தார் விஜயகாந்த். அப்போது தான் ரஜினி வீட்டுக்கு விஜயகாந்த் நேரடியாக போய் இருந்தார். அங்கு விஜயகாந்த் தரையில் உட்கார்ந்து இருந்தார்.

சங்கத்தில் விலகிய காரணம்:

இதை கண்ட ரஜினிகாந்த் பதறிப் போனார். பின், அண்ணே நிகழ்ச்சிக்கு நீங்க கண்டிப்பாக வரவேண்டும் மறுக்கக்கூடாது என்றும், நீங்கள் ஒப்புதல் கொடுத்தால்தான் சோபாவில் உட்காருவேன் என்றும் விஜயகாந்த் கூறினார். உடனடியாக மனம் நெகிழ்ந்த ரஜினிகாந்த் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்றுக்கொண்டார். இப்படித்தான் ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனையும் அடைத்திருக்கிறார் விஜயகாந்த். அதோடு சங்கத்துக்காக வைப்புத் தொகையையும் சேர்த்து வைத்திருக்கிறார். பிறகு திடீரென கட்சியை ஆரம்பித்து விட்டார் விஜயகாந்த். அரசியலில் இருந்து கொண்டு நடிகர் சங்க தலைவராக செயல்படுவது சரிவராது என்று தானாகவே அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

Advertisement