காலம் கடந்த பிறகு கிடைத்திருக்கும் இந்த விருது – கேப்டனுக்கு கிடைத்த பத்மபூஷன் குறித்து பிரேமலதா.

0
459
- Advertisement -

விஜயகாந்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பத்மபூஷன் விருது குறித்து பிரேமலதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

-விளம்பரம்-

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன் விஜயகாந்தின் திருவுருவ படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

- Advertisement -

விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி:

இதில் பிரேமலதா மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பிரேமலதா தன்னுடைய கணவர் விஜயகாந்தின் இறுதி நாட்கள் குறித்து பேசி இருந்தார். அதன் பின் தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாக தான் இனி என்னுடைய வாழ்க்கை இருக்கும். இனி மக்களுக்காக தான் என்னுடைய வாழ்க்கை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பத்மபூஷன் விருது கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பத்ம விருதுகள் குறித்து தகவல்:

அதாவது, இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதாக பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என்ற முழு பிரிவுகளில் இந்த விருதுகள் கொடுக்கப்படுகின்றது. கலை சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவருக்கு இந்த பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றது.

-விளம்பரம்-

விஜயகாந்துக்கு கொடுத்த விருது:

அந்த வகையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. கலைத்துறையில் சிறந்து பணியாற்றியதற்காக இந்த விருது விஜயகாந்த்க்கு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பேட்டியில் பிரேமலதா, கேப்டன் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவித்திருக்கிறார்கள்.

பிரேமலதா பேட்டி:

நேற்று காலையிலேயே உள்துறை அமைச்சர் எங்களை அழைத்து சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறோம். காலம் கடந்து காலம் எடுத்துச் சென்ற பிறகு இந்த விருது கிடைத்தது. மிகவும் நல்ல விருது . அவர் உயிருடன் இருக்கும் பொழுதே இந்த விருது கொடுத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
விஜயகாந்த் அன்பு கொண்ட, தமிழக மக்கள் கட்சி தொண்டர்கள் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி என்று கூறி இருக்கிறார்.

Advertisement