ஜெயிலர் படத்தை சொல்லி லோகேஷிற்கு லியோ தயாரிப்பாளர் கொடுத்துள்ள அழுத்தம் – லோகேஷின் பதில்.

0
876
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்த விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் இசை விழாவை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

லியோ படம்:

இப்படி இந்த படம் தொடங்கியதில் இருந்து பல சர்ச்சைகள் வெளியாகிக் கொண்டுதான் வருகிறது. ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சையில் விஜய்- ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே பனிப்போரே நடந்தது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.

ரஜினி-விஜய் இடையே சர்ச்சை:

அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்டு இருந்தது.
அதோடு இந்த பாடல் வரிகள் எல்லாம் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தார்கள். இதற்கு சில பிரபலங்கள் ஆதரவு கொடுத்தும், சில பிரபலங்கள் எதிர்த்தும் பேசியும் இருந்தார்கள். தற்போது ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ முறியடிக்குமா? என்ற புது சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

ஜெயிலர் வசூல் சாதனை:

ஜெயிலர் படம் வெளியாகி உலகம் முழுவதும் 700 கோடிக்கு மேல் அதிகமான தொகையை வசூலித்து இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு உலகம் முழுவதும் ஜெயிலர் படம் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாகியிருக்கிறது. இதனால் விஜய்யின் லியோ படத்தை உலகம் முழுவதும் 25000-30,000 திரையரங்கில் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் லியோ படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் ஜெயிலர் படத்தை விட அதிகமாக லியோ வசூல் செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரோ, மற்றவர்கள் யாராவது கூறியிருக்கிறார்களா? என்று கேட்டு இருக்கிறார்கள்.

லோகேஷ் கொடுத்த பதில்:

அதற்கு லோகேஷ், ஒரு படம் இன்னொரு படத்தை விட அதிக வசூல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அடுத்த வாரம் வருகிற படத்தை விட இந்த படம் அதிகமாக செய்யலாம். லியோ தயாரிப்பாளர் லலித் அவர்கள் ஒரு மீம்ஸை காண்பித்து ஜெயிலர் படத்தின் வசூலை விட லியோ படம் செய்யணும் என்று வேடிக்கையாக சொன்னார். உடனே நான் அவரிடம், நீங்கள் எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி தந்த மாதிரி எல்லாம் மீம்ஸ் வந்தது பார்த்தீர்களா? என்று காமெடியாக எங்களுக்குள் நடந்த கான்வர்சேஷன் தான். மற்றபடி இந்த படம் இவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அந்த மாதிரி படம் எடுக்கும்போது எந்த காண்ட்ராக்ட்ம் போட்டது கிடையாது என்று பேசி இருந்தார்.

Advertisement