மீண்டும் மோசமான விஜயகாந்த் உடல் நிலை ? அமெரிக்கா கொண்டு செல்ல படவிருக்கிறார்..!

0
994
vijayakanth
- Advertisement -

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 18) மீண்டும் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

விஜயகாந்தின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது அதனால் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்று பல செய்திகளும் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கின. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று பின்னர் தான் தெரியவந்தது.

- Advertisement -

விஜயகாந்த அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவருவது உண்மை தான். அது போல தான் நேற்றும் ஒரு சாதாரண பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்காவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர் ஏற்கனவே ஒருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அதற்கு பிறகு அவர் சென்னை திரும்பினார். தற்போது அவர் மீண்டும் இரண்டாவது முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement