டபுள் ஆக்ஷனில் விஜய், டைட்டிலுடன் வெளியானது தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லோக் போஸ்டர். செம மாஸ் டைட்டில்.

0
651
- Advertisement -

தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி லிஸ்டில் சேர்ந்தது.

-விளம்பரம்-

இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படம் தொடர்பாக பத்து மாதங்களுக்கு முன்பே வெங்கட் பிரபு விஜய் சந்தித்து இருக்கிறார்.

- Advertisement -

அப்போது எடுத்த புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இணைந்திருக்கிறார்கள். இந்த படம் மாநாடு படம் போல டைம் லூப் போல் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த படத்திற்கு கதாநாயகியாக மீனாட்சி சௌதாரி நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கிடையே தளபதி 68 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. படத்தின் பெயர் Boss, Puzzle என சமூகவலைதளவாசிகள் ட்ரெண்ட் செய்து வந்தனர். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி X தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதில் “Boss, Puzzle எல்லாம் நிச்சயமாக இல்லை. வெங்கட்பிரபு சிறப்பான ஒரு டைட்டிலை தயார் செய்கிறார். நிஜமான தலைப்பு விரைவில்… அதுவரை அமைதி காக்கவும். உங்கள் அன்புக்கு நன்றி” என்று தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் Greatest Of All Time என்று அர்த்தம். இந்த டைட்டில் தளபதிக்கு பொருத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது படத்தின் போஸ்டர் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜய் அழகிய தமிழ் மகன், பிகில், மெர்சல், கத்தி என்று பல இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் முதல் டபுள் ஆக்சன் படம் இது என்பதால் இந்த படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement