கோலங்கள் புடவை போல ட்ரெண்டாகும் எதிர் நீச்சல் கதிரின் வேட்டி.

0
1248
Kathir
- Advertisement -

கோலங்கள் புடவை போல எதிர்நீச்சல் சீரியலில் கதிரின் வேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிகைகள் அணிந்து வரும் உடைகளும், நகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். அதிலும் நடிகைகள் பயன்படுத்திய புடவைகளை அவர்களுடைய பெயர்களை வைத்து விற்பனையும் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது நடிகர் கட்டி வரும் வேட்டி தான் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, நம்ம எதிர்நீச்சல் கதிர் தான். சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட் கொடுத்து வரும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் நான்கு மருமகள்களில் ஒருவராக இருப்பவர் நந்தினி. இவருடைய கணவர் தான் கதிர். இவருடைய உண்மையான பெயர் ஜெகதீஷ். இவர் ஏற்கனவே நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் கதிர்:

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலில் இவர் தன்னுடைய அண்ணன் ஆதி குணசேகரனின் தம்பியாகவும், அவருக்கு வலது கை போலவும் செயல்பட்டு வருகிறார். இவர் ரொம்ப கோவக்காரராக இந்த சீரியலில் வில்லத்தனத்தை காண்பித்திருக்கிறார். இதனால இவரை பல பேர் திட்டி சபித்தும் வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் இந்த தொடர் முழுக்க கலர் கலரான வேட்டிகளை கட்டி வருகிறார்.

கதிர் வேட்டி பிரபலம்:

அதற்கு ஏற்ப சட்டைகளையும் போட்டு இருக்கிறார். திருமண நேரத்தில் கூட இவர் வேட்டி தான் கட்டி வருகிறார். இதனாலே இவருடைய வேட்டி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் எங்கு இந்த வேட்டியை வாங்கினீர்கள்? எங்களுக்கும் சொல்லுங்க என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஏற்கனவே இயக்குனர் திருசெல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் தேவயானி கட்டிருந்த புடவைகளும் இப்படித்தான் பிரபலமானது.

-விளம்பரம்-

கோலங்கள் புடவை:

சொல்லப்போனால், துணிக்கடைகளிலேயே மக்களும் கோலங்கள் புடவையை கொடுங்கள் என்று தான் கேட்பார்கள். அந்த அளவிற்கு கோலங்கள் புடவை பிரபலமானது. தற்போது எதிர்நீச்சலில் கதிர் அணிந்து வரும் வேட்டி பிரபலமாக இருக்கிறது. பலரும் மைனர் வேட்டி கதிர் என்று தான் ஜெகதீஷை அழைத்து வருகிறார்கள். ஆக மொத்தம் நடிப்பில் பிரபலமானாரோ இல்லையோ வேட்டியில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் ஜெகதீஷ்.

எதிர்நீச்சல் சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

Advertisement