கேப்டன் உயிரோடு இருந்த போது விஜய்க்கு அனுமதி கொடுக்கவில்லையா? உண்மையை போட்டுடைத்த கேப்டனின் மேனேஜர்.

0
230
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்த கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை. கேப்டன் இறப்பிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலியை செலுத்தினர். இறப்பிற்கு வர முடியாத பலர் சமூக வலைதளத்தில் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து இருந்தனர். ஆனால், வெளிநாட்டில் ஷூட்டிங் இருந்த விஜய் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக வந்து கேப்டன் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

-விளம்பரம்-

என்னதான் கேப்டன் இறப்பிற்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாலும் அவர் உயிரோடு இருக்கும் போது விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு. ஆனால், விஜயகாந்திற்கு உடல் நிலை சரியில்லாம இருந்த விஜய் அவரை நேரில் சந்திக்க பல முறை முயற்சி செய்ததாகவும் ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் அதனால் தான் விஜய், கேப்டனை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

உண்மை என்ன :

இப்படி ஒரு நிலையில் இந்த விசயத்தை மறுத்துள்ளார் கேப்டன் மேனேஜர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் ‘விஜய் அவர்கள் கேப்டனை சந்திக்க ஒரு வருடம் முயற்சி செய்தும் அவரால் சந்திக்க முடியவில்லை என்று கூறுவது சுத்த பொய். யாராவது கேப்டனை பார்க்க வேண்டும் என்று சொன்னால் காலை 10 மணி அல்லது 11 மணிக்கு வந்து விடுங்கள் என்று சொல்லுவார்கள். அப்படி யார் வேண்டுமானாலும் கேப்டனை சந்திக்கலாம்.

இவரை மட்டும் விடமாட்டார்களா? :

அப்படி இருக்கையில் விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ அவர் கேட்டு யாராவது முடியாது என்று சொல்வார்களா. ஸ்டாலின் சார் சென்று பார்க்கிறார் ரஜினி சார் சென்று பார்க்கிறார் ஆனால் இவரை மட்டும் ஏன் விட மாட்டார்களா? . அவரது இறப்பில் கூட அரசியல் வாதிகள், போலீசார், குப்பை அள்ளும் தொழிலார்கள் என்று ஒரே வரிசையில் தான் சென்று பார்த்தார்கள். அந்த அளவிற்கு வேறுபாடு கிடையாது என்பதை காட்டவில்லையா’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மீசை ராஜேந்திரன் அளித்த பேட்டி :

ஏற்கனவே விஜய் குறித்து பேசிய கேப்டனின் விசுவாசியான மீசை ராஜேந்திரன் ‘ விஜய் பிரபலமாக காரணமாக இருந்த விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரை ஒரு முறை கூட நேரில் சென்று விஜய் சந்திக்கவில்லை. இதுதான் ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது மீசை ராஜேந்திரன், அண்ணியாரே ஒரு கட்டத்தில் சொன்னார்கள்.

பிரேமலதா சொன்ன விஷயம் :

நீங்கள் அவர்களைப் பற்றி பேச வேண்டாம், அவர்களே தெரிந்து புரிந்து கொண்டு தான் பார்க்க வரணும். நாம் ஒருவரை சொல்லி கட்டாயப்படுத்தி பார்க்க வர வைக்க கூடாது.இனி பேச வேண்டாம் என்று சொன்னார்கள் .அதற்குப் பிறகு நான் எந்த பேட்டியில் அதைப்பற்றி பேசவில்லை. என்னைப் போன்று பலருக்குமே வருத்தம் இருக்க செய்யும். அதேபோல் விஜய்க்கும் தான் வருத்தம் இருக்கும். உயிருடன் இருக்கும் போது ஒரு முறையாவது பார்த்திருக்கலாம் என்று அவருக்குள்ளும் வேதனை இருக்கத்தான் செய்யும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement