கடன் தொல்லை, ஏலத்திற்கு வரும் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி.! எவ்வளவு கோடி தெரியுமா?

0
975
Vijayakanth
- Advertisement -

நடிகரும் தே மு தி க கட்சி தலைவருமான விஜயகாந்தின் வீடு மாற்றும் கல்லூரி ஏலத்திற்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீட்டின் மீதும், கல்லூரி மீதும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் இந்தியன் ஓவர் சீஸ் வாங்கி விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளது.

-விளம்பரம்-
Image result for vijayakanth home

இதில் விஜயகாந்தின் கல்லுரியான ஆண்டாள் அழகர் கல்லூரியும் அடக்கம். இந்தக் கல்லூரியை கட்ட தற்போது குடியிருக்கும் தனது வீடு மற்றும் சாலிகிராமத்தில் வேதவல்லி தெருவில் உள்ள காலி மனை ஆகியவற்றை பிணையாக வைத்து கடன் பெற்றுள்ளார் விஜயகாந்த். அப்போது பெறப்பட்ட தொகை 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய். 

- Advertisement -

இந்த கடன்களை அடைக்க விஜயகாந்திற்கு சொந்தமான 100 கோடி சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளது. ஏலம் முடிந்ததும் விஜயகாந்த் வாங்கிய 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் கடனை வட்டியுடன் விஜயகாந்த் கட்டிவிட்டு மீதமுள்ள தொகையை விஜயகாந்த்திடமே ஒப்படைக்கப்படும். வரும் ஜூலை 26 ஆம் தேதி ஏலம் நடைபெறும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

Image result for andal alagar college

இந்த ஏலத்தில் விஜயகாந்திற்கு சொந்தமான 4,38,956 சதுர அடி கொண்ட ஆண்டாள் அழகர் கல்லூரியும், சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய விஜகாந்த்திற்கு சொந்தமான 4,651 சதுர அடி கொண்ட வீடும் ஏலத்திற்கு வருகிறது. வீட்டின் குறைந்த பட்ச ஏலம் கேட்கும் தொகை 92,05,05,051 ரூபாயும் மற்றும் ஒரு சொத்தின் குறைந்தபட்ச எனலாம் கேட்கும் தொகை 4,25,849 ரூபாய்க்கும் ஏலம் விடபட உள்ளது.

-விளம்பரம்-
home-owned-by-vijayakanth-to-be-auctioned

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளது அவரது குடும்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமளுக்கு இணையாக ஒரு மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரை மக்கள் கருப்பு எம் ஜி ஆர் என்று உசுப்பேத்தி விட அரசியலில் களமிறங்கினார் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் கெத்தாக அரசியல் களத்தில் நின்ற விஜயகாந்த் அதன் பின்னர் தனது பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.

இருப்பினும் இவர் மீது அவரது ரசிகர்களும் தொடர்களும் அதிக அன்பை வைத்து வந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே மு தி க கட்சி தமிழகத்தில் ஆளும் கட்சியான ஆ தி மு க வுடன் கூட்டணி வைத்து படு தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தின் அணைத்து சொத்துக்களையும் அவரது மைதுனரான எல்.கே.சுதீஷ் தான் கண்காணித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement