‘படம் ஓடலைன்னா என்னைப் பார்க்கவே வராதே’ – இயக்குனருக்கு கேப்டன் வைத்த கெடு, சொல்லி அடித்த படம்.

0
406
- Advertisement -

ஆர் கே செல்வமணியின் புலன் விசாரணை படம் உருவான விதம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே திரைப்படக் கல்லூரியில் மூலம் வெளிவரும் மாணவர்களால் சினிமா துறையில் சாதிக்க முடியாது, திறமை இல்லை என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். ஆனால், இதை தகர்த்தெறிந்தவர் தான் ஆர் கே செல்வமணி. இவர் இயக்கிய முதல் திரைப்படம் புலன்விசாரணை. இந்நிலையில் ஆர்கே செல்வமணி உருவாக்கிய புலன் விசாரணை குறித்த தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

-விளம்பரம்-

ஆர் கே செல்வமணி தந்தை ஒரு தமிழாசிரியர். அதோடு அரசியல் கட்சி பற்றுடையவர். சினிமா பார்ப்பதற்கு தடை, சிறுவர்களுக்கான படங்களை மட்டும் தான் பார்க்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தவர் செல்வமணி. இவர் பிறந்ததிலிருந்து கல்லூரிக்கு செல்லும் வரை மொத்தமே ஒரு 20 படங்கள் பார்த்திருந்தாலே பெருசு. பின் தன் தந்தையின் விருப்பப்படி தனக்கு ஆர்வம் இல்லாமல் சென்னைக்கு வந்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார் செல்வமணி. ஆனால், அவருக்கு திரைப்படங்கள் எடுப்பதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. அப்போதுதான் சென்னையில் திரைப்பட கல்லூரி ஒன்று இருப்பது செல்வமணிக்கு தெரிய வந்திருக்கிறது. வீட்டிற்கு தெரியாமல் அந்த கல்லூரியில் செல்வமணி விண்ணப்பித்து டைரக்ஷன் கோர்ஸில் சேர்ந்தார்.

- Advertisement -

செல்வமணி முதல் திரைப்படம்:

இயக்கம் தொடர்பானது மட்டும் இல்லாமல் எடிட்டிங், சவுண்ட், கேமரா என்ற பல்வேறு துறைகளிலும் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி இருந்தார் செல்வமணி. மேலும், படித்துக் கொண்டிருக்கும் போதே இவர் ஒரு எடிட்டரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் எடிட்டர் உடைய வழிகாட்டுதலின் பேரில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக ஆர்கே செல்வமணி சேர்ந்தார். பின் மணிவண்ணனை விட்டு வெளியே வந்தாலும் செல்வமணிக்கு இயக்குனர் ஆகுவதற்கான வழி எளிதாக கிடைக்கவில்லை. ஆங்கிலம் படங்களை போல தமிழில் பிரம்மாண்டமான ஆக்சன் படத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாக இருந்தது. இதற்காக சில முன்னணி நடிகர்களிடமும் செல்வமணி கதை எல்லாம் சொன்னார். ஆனால், அவர்கள் புதிதாக படங்களை இயக்க வருவதால் பல நடிகர்கள் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார்கள்.

ராவுத்தர் ஆசை:

அதற்குப் பிறகு செல்வமணி, நடிகர் விஜயகாந்திடம் கேட்க சென்றார். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. இதனால்விஜயகாந்தின் நண்பரான ராவுத்தரை சந்தித்தார். ஆனால், ராவுத்தரும் செல்வமணியை நிராகரித்தார். பின் ராவுத்தருக்கு விஜய்காந்தை வைத்து ஒரு ஹாலிவுட் பாணியில் ஒரு பிரமாண்ட படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்ததை புரிந்து கொண்டு செல்வமணி ஆங்கில படத்தின் சில ஸ்டில்களை வெட்டி விஜயகாந்தின் உருவத்தை வைத்து பொருத்தி நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகளை கொண்டு ஒரு ஆல்பமாக மாற்றியிருந்தார். இதை வைத்து தான் புலன்விசாரணை கதை உருவாக ஆரம்பித்தது.

-விளம்பரம்-

படம் உருவான விதம்:

ஆல்பம் மட்டுமில்லாமல் திரைப்பட கல்லூரியில் தான் உருவாக்கிய குறும்படத்தையும் ராவுத்தருக்கு செல்வமணி போட்டு காட்டி இருந்தார். இதனால் ராவுத்தருக்கு செல்வமணியின் மீது நம்பிக்கை அதிகமானது. அதன் பிறகு விஜயகாந்த்திடம் ராவுத்தர் பேசி இருக்கிறார். தயாரிப்பாளர் ஹாலிவுட் படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னவுடன் செல்வமணிக்கும் ஆசை வந்தது. இந்த படம் எடுக்கும் போது பல பிரச்சனைகள் வந்தது. இருந்தாலும் செல்வமணி எடுத்து முடித்தார். குறுகிய நாட்களிலேயே படத்தை எடுத்து முடித்தார்.

படம் வெற்றி:

பின் சிறப்பு காட்சியை பார்த்து ராவுத்தர், படம் ஓடிவிட்டது என்றால் என்னை பார்க்கவா, இல்லை என்றால் வராதே என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செல்வமணிக்கு தன்னுடைய முதல் படத்தின் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அதற்கு ஏற்ப புலன் விசாரணை படம் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. செல்வமணி முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனர் ஆனார். இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் 2015ல் வெளியானது. ஆனால் இது பெரிய அளவில் பேசப்படவில்லை.

Advertisement