இந்த மதத்தில் இது போல் நம்பிக்கைலாம் இல்லனு சொன்னேன்,அப்பயும் கேட்கல – லியோ படத்தை சூசகமாக விமர்சித்த SAC.

0
361
- Advertisement -

சமீபத்தில் ஒன்றில் பங்கேற்ற எஸ் ஏ சி இப்போது இருக்கும் சில இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்து தாங்களும் பெரிய இயக்குநர்களாகி விடுகின்றனர் என்றும் கதை, திரைக்கதையை யாரும் மதிப்பதில்லை. சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு அந்த இயக்குநருக்குக் கால் பண்ணிப் பேசினேன். படத்தின் முதல் பாதி சூப்பர் என்று பாராட்டிப் பேசினேன். இரண்டாம் பாதியில் சில குறைகள் இருக்கிறது என்றேன்.

-விளம்பரம்-

பாராட்டிப் பேசியதைக் காது கொடுத்துக் கேட்டவர், குறைகளைச் சொல்ல ஆரம்பத்தவுடனே ‘சாப்பிட்டுட்டு இருக்கேன் சார். அப்புறமா கூப்பிடுறேன்’ என்று போனைக் கட் செய்துவிட்டார். அதன்பிறகு கூப்பிடவே இல்லை. இந்த மதத்தில் இதுபோன்ற நம்பிக்கைகள் எல்லாம் இல்லை. தகப்பனே தன்னுடைய பிள்ளையைக் கொல்வது சரியாக இல்லை’ என்று படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கும் குறைகளைச் சொல்ல ஆரம்பித்தேன். அதையெல்லாம் அவர் கேட்கவில்லை.

- Advertisement -

அந்தப் படம் வெளியானபோது படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் நல்லா வச்சு செஞ்சாங்க. நான் சொன்ன குறைகளை அவர்களும் சுட்டிக் காட்டி விமர்சித்தார்கள். ரிலீஸ்க்கு முன்பே நான் அந்தப் படத்தைப் பார்த்துக் குறைகள் சொன்னபோது அதை மாற்றுவதற்கு நேரம் இருந்தது. படம் வெளியாக 5 நாட்கள் இருந்தன. அதனால் சில குறைகளை அப்பவே சரிசெய்திருக்கலாம். ஆனால் நான் சொன்னதைக் கேட்கவில்லை. 

ஏற்கனவே பீஸ்ட் படம் வெளியான போதே அந்த படத்தை விமரித்து பேசி இருந்தார் எஸ் ஏ சி. அந்த படம் குறித்து பேசிய அவர் ‘ . பீஸ்ட் படத்துக்கு ஏன் நெகடிவ் விமர்சனம் வருகிறது. அவ்ளோ பெரிய ஹீரோ நடித்து இருக்கிறார் அந்த படம் ஏன் சரியில்லன்னு சொல்றாங்க. ஆனாலும் கலெக்ஷன் வந்துவிடுகிறது. இந்த படம் தோல்விபடமாக என்பதை மூன்றாம் நாளே சொல்ல முடியாது. இருப்பினும் ஒரு இயக்குனர் கதையை மாற்ற தேவை இல்லை.

-விளம்பரம்-

ஆனால், ஒரு ஹீரோவுக்கு ஏற்றார் போல படம் இருக்க வேண்டும். விஜய்க்கு டான்ஸ் தான் பலம். அதை வைத்து தான் எடுக்க வேண்டும். அதே போல ஸ்க்ரீன்பிளேவில் தான் அனைத்தும் இருக்கிறது. இப்படி ஒரு கதையை எடுக்கிறீரங்க. அதுவும் ரா ஏஜென்ட் எல்லாம் சொல்றீங்க. அப்போது ரா ஏஜென்ட் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஸ்க்ரீன் பிளே நல்லா இருக்கும்.

திரைக்கதை தான் ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம். பீஸ்ட் படம் ஓடிடும், கலெக்ஷன் பன்னிடும் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. இந்த படம் இசையமையாளர் இருக்கார், டான்ஸ் மாஸ்டர் இருக்கார், எடிட்டர் இருக்கார் ஆனால், டைரக்ட்டர் தான் இல்லை என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது லியோ படத்தின் பெயரை சொல்லவில்லை என்றாலும், எஸ் ஏ சி சொன்ன அந்த படம் லியோ தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement