நிச்சயதார்த்தம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் விஜயகாந்த் மகனின் திருமணம் நடக்கவில்லை – காரணம் இது தான்

0
1053
- Advertisement -

நிச்சயதார்த்தம் நடந்து இரண்டரை ஆண்டுகள் கழித்தும் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்காத இருப்பதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்து இருக்கிறது. இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

- Advertisement -

விஜயகாந்த் குறித்த தகவல்:

அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதோடு இவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சில காலமாக உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார்.

தீவிர சிகிச்சை பெறும் விஜயகாந்த்:

தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்துக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பேசும் திறனும் குறைந்து உள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் மகன் நிச்சயதார்த்தம் :

இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார். விஜய பிரபாகரன் இப்போது தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார். பின் 2019 டிசம்பரில் விஜய பிரபாகரனுக்கும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் நடக்காததற்கு காரணம்:

ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தான் இந்த தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அதோடு திருமணத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புவதாகவும், அவரது தேதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் விஜயகாந்தின் மகன் திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இது தொடர்பாக கேப்டன் குடும்பத்திடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement