காலில் இருந்து நீக்கப்பட்ட விரல்கள், அறுவை சிகிச்சைக்கு பின் விஜயகாந்த் வெளியிட்ட முதல் அறிக்கை இதோ.

0
703
vijayakanth
- Advertisement -

தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.அது மட்டுமில்லாமல் சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். விஜயகாந்துக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். கடந்த ஜுன் 14ம் தேதி விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

இதையும் பாருங்க : நாய்க்கு தனி விமானமா ? கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட புகைப்படங்களை கண்டு காண்டான ரசிகர்கள்.

- Advertisement -

நீக்கப்பட்ட மூன்று விரல்கள் :

சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களுக்கும் அவருக்காக வேண்டினர்.

விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை :

இப்படி ஒரு நிலையில் சிகிச்சைக்கு பின் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அதில் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தொலைபேசி வாயிலாகவும், டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-விளம்பரம்-

அனைவரின் பெயரையும் குறிப்பிட்ட கேப்டன் :

தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், வி.கே. சசிகலா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

ரசிகர்கள், தொண்டர்களுக்கும் நன்றி :

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கும் எனது நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement