நாய்க்கு தனி விமானமா ? கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட புகைப்படங்களை கண்டு காண்டான ரசிகர்கள்.

0
269
keerthisuresh
- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் விமான பயணம் செய்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : சொப்பன சுந்தரி முதல் தங்க புஸ்பம் வரை – படத்தில் ஒரு காட்சியில் கூட வராமலேயே பிரபலமான பெயர்கள்.

- Advertisement -

சாணி காயிதம் :

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம்.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், லிஸ்டில் ஆண்டனி, வினோத் முன்னா உட்பட பலர் நடிக்க பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி இருந்தது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் கீர்த்தி சுரேஷ்:

இந்த தமிழில் சூப்பர் ஹிட் பெற்ற அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘போலோ சங்கர்’ என்று பெயர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் விமான பயணம் செய்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.இதனால் இவரை 13 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட புகைப்படம்:

இதனால் இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அவர்கள் தன்னுடைய செல்ல நாய் குட்டி உடன் விமான பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரத்திலேயே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்குகளை பெற்றிருக்கிறது. அதோடு இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், அந்த நாயாக நாங்கள் இருந்து இருக்கலாம்! என்று புலம்பி வருகின்றனர்.

Advertisement