அன்பிற்கினிய திரு சிவகுமார் பெரியப்பா திருமணத்தில் என் அம்மாவும் அப்பாவும் – அரிய புகைப்படத்தை பகிர்ந்த விஜயசாரதி, அட, இந்த நடிகரா ?

0
907
Vijayasarathy
- Advertisement -

நடிகர் சிவகுமாரின் திருமணத்தில் கலந்து கொண்ட தன்னுடைய தாய் தந்தையரின் வகுப்பிடத்தை பகிர்ந்து இருக்கிறார் தொகுப்பாளர் விஜய் சாரதி.90 காலகட்டத்தில் சன் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பான நீங்கள் கேட்ட பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயசாரதி. இவரை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஊர் ஊராக சென்று நேயர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விருப்பமான பாடல் கேட்டு தொலைக்காட்சியில் போட்டு வந்தார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் சூப்பர் சீனியர் என்று சொல்லாம்.

-விளம்பரம்-

பின் இதன் மூலம் இவருக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனை தொடர்ந்து இவர் சிரியல்களில், படங்களிலும் நடித்தார். பின் நடுவில் கொஞ்சம் காணாமல் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் பிரபல நடிகர் சிவகுமாரின் திருமணத்தில் கலந்துகொண்ட தனது தாய் தந்தையரின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் ‘பொக்கிஷம், சிவகுமார் அங்கள் திருமணத்தில் என்னுடைய அம்மா மற்றும் தந்தை. அன்பிற்கினிய திரு சிவகுமார் பெரியப்பா (அப்படித்தான் அழைக்க சொல்வார்) திருமணத்தில் எனது அப்பாவும் அம்மாவும். எனது தந்தை மறைந்த நடிகர் திரு.சசிகுமார் அவர்கள். எல்லாம் நினைவுகள் மட்டுமே’ என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்தசாரதியின் தந்தை வேறு யாரும் கிடையாது மறைந்த பிரபல நடிகர் சசிகுமார் தான். இது பலரும் அறிந்திராத விஷயம். மேலும், தனது தாய் தந்தை இறப்பு குறித்து விஜயசாரதி கடந்த ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ‘யூடியூப் சேனல் நடத்தும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். என்னைப் பற்றி எழுதுவது, விசாரிப்பது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 90கிட்ஸ் இலிருந்து 2k கிட்ஸ் வரை எல்லோரும் என்னை நினைவில் கொண்டு கேட்பதில் பெருமையாக இருக்கிறது. மறைந்த நடிகர் சசிகுமார் மகன் தான்.

-விளம்பரம்-

நான் என்னுடைய அப்பாவும் அம்மாவும் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் நடந்த தீ விபத்தில் இறந்து விட்டார்கள். அப்ப நானும் என் அக்காவும் ரொம்ப சின்ன பிள்ளைகள். எங்களை என் பாட்டி தான் வளர்த்தார்கள். ரொம்ப வருஷத்துக்கு பிறகு தான் எங்கள் அம்மா, அப்பா இறந்ததை நான் உணர்ந்தேன். ஆனால், சோசியல் மீடியாவில் என் அப்பா, அம்மா இறப்பு குறித்து உங்களுக்கு தோன்றுவது எழுதுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

தயவுசெய்து இந்த மாதிரி எழுதாதீர்கள். இதைப் பார்க்கும் போதெல்லாம் மனது வலிக்கிறது. இது ஏன் செய்கிறீர்கள்? உங்களுடைய சேனல் பிரபலத்திற்கு அடுத்தவர்களுடைய உணர்வில் விளையாடாதீர்கள்.அதோடு மட்டுமில்லாமல் நடிகர் சங்கம் தான் சசிகுமார் உடைய மகள், மகனை வளர்த்து என்று சொல்லி இருக்கிறார்கள்.இது மாதிரி பேசுவார்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்கிறேன். என்னையும் என்னுடைய அக்காவையும் வளர்த்தது, படிக்க வைத்தது என்னுடைய அம்மாவோட அம்மா தான் என்று கூறி இருந்தார்.

Advertisement