உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா – விஜய்யின் பிகில் படத்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
720
vijay
- Advertisement -

இந்தியாவில் எப்படி கிரிக்கெட்டை கொண்டாடுகிறோமோ அந்த அளவிற்கு அண்டை நாடுகளில் கால்பந்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வாழ்கையில் உலகக்கோப்பை கால்பந்து 2022ல் கடந்த ஒரு மாதமாக 32 அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் அர்ஜின்ட்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது உலக மக்கள் அனைவரும் இறுதி போட்டி நடக்கும் கர்த்தரில் உள்ள லுசைல் ஐகானிக் மைதானத்தை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

90 நிமிடங்கள் கடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் 2-2 என்ற நிலையில் இருந்தனர். இதனால் கூடுதல் 30 நிமிடங்க்ள கொடுக்கப்பட்டது. கூப்டுத்தலாக கொடுக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா 3-3 என்ற நிலையில் இருக்க போட்டியை முடிவுக்கு கொண்டு வர பெனால்டி ஹிட் அவுட் முறை கொண்டு வரப்பப்பட்டது. இதில் அர்ஜென்டினா 4ற்கு 4 கோல்கள் அடிக்க , பிரான்ஸ் அணி 2 மட்டுமே அடித்து தோல்வியடைந்த நிலையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

அர்ஜென்டினா அணி கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து 3வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதில் லீக், நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி என 5 போட்டிகளிலும் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினாவை சேர்ந்த லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். அதோடு இறுதியில் கோல் அடித்த என்சொ பெர்னான்டஸ்க்கு சிறந்த இளம் வீரர் என்ற பட்டமும், அர்ஜென்டினா அணிக்கு அரண் போல நின்று அர்ஜெடினாவை காப்பாற்றிய மார்டினெஸ்க்கு சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை வழக்கப்பட்டது.

அதோடு தனி வீரராக உலக கோப்பை கால்பந்து 2022ல் 8 கோல்களை அடித்த பிரான்ஸ் அணியை சேர்ந்த எம்பாப்பே விற்கு தங்க காலணிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டியின் நாயகனான லயோனல் மெஸ்ஸி 3 தங்க பதக்கங்களை வென்றார். இந்நிலையில் அர்ஜென்டினா அணிக்கும் ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “ப்ரிம் வீடியோஸ் இந்தியா” தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்று பதிவிட்டுள்ளது.

-விளம்பரம்-

கடந்த 2019ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்திருந்த “பிகில்” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு நல்ல விமர்சங்களையும் இந்த படம் பெற்றிருந்தது. இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து வீரராக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கு, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார் மேலும் வர்ஷா பூலம்மாள். அமிர்த்தா ஐயர், மோனிகா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படமானது வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி வரை வசூலித்திருந்தது.

தற்போது விஜய் நடித்திருக்கும் வாரிசு அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் வாரிசு படம் வெளியாவதினால் விஜய் ரசிகர்கள் மத்தியில் “வாரிசு” படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்று “ப்ரிம் வீடியோஸ் இந்தியா” தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பதிவை பலரும் கலாய்த்து மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement