விஜய் செய்த உதவி – மணம் உருகும் தயாரிப்பாளர்

0
1492

தளபதி விஜய்க்கு உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது ரசிகர்கள் அவருக்காக எதனையும் செய்யும் அளவிற்கு ரசிகர்கள் அவர் மீது பாசத்தை வைத்துள்ளனர். அதற்கு காரணம் அவர் திரையும் காட்டும் அந்த நல்ல கேரக்டரால் மட்டும் அல்ல அவரது நிஜ வாழ்க்கையிலும் அவர் காட்டும் அந்த நல்ல விசயங்கள் தான்.

- Advertisement -

அவருடன் பணியாற்றும் டெக்னீசியன்கள் மற்றும் டைரக்டர்கள் அவர் உதவி செய்ததை பார்த்திருப்போம். தற்போது பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ் தாணு, தனக்கு விஜய் உதவியதைப் பற்றி கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது.

-விளம்பரம்-

படத்தயாரிப்பின் போது விஜய் பலமுறை எனக்கு உதவியிருக்கிறார். தெறி படம் பட்ஜெட்டை தாண்டி சென்றுகொண்டிருக்கும் போது, விஜய் தானக முன்வந்து தனது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார். இதனால் பட்கெட்டும் சரிகட்டப்பட்டு படம் பிளாக் பஸ்டர் ஆகியது.

அதே போல், துப்பாக்கி படம் ஸ்விட்சர்லாந்தில் சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்த போது, பணப் பற்றாக்குறை ஏற்ப்பட்டது. பின்னர் அங்கு செலவுகளை எல்லாம் தம்பி விஜய் தான் பார்த்துக்கொண்டார் என மணம் நெகிழ்ந்து கூறுகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

Advertisement